|
கருவாட்டு வியாபாரி இருவர் வியாபாரம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் மழை பெய்ததால் ஒரு வீட்டின் திண்ணையில் ஒதுங்க, அந்த வீட்டுக்காரர் வீட்டில் தூங்குவதற்கு இடமளித்தார். அவரோ வாசனைத்திரவியங்கள் விற்பவர். அதனால் வீடெங்கும் நறுமணம் கமழ்ந்தது. கருவாடு வாசனையுடன் பழகிய வியாபாரிகளுக்கு நறுமணத்தால் தூக்கம் வரவில்லை. ஒரு வியாபாரியோ, ”கருவாட்டுக் கூடையை அருகில் வைத்தால் தான் எனக்கு தூக்கம் வரும்” என்றார். இருவரும் கூடையை அருகில் வைத்துக்கொண்டே நிம்மதியாக தூங்கினர். இதை தான் ’தொட்டில் பழக்கம்’ என்பார்கள். ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் வெவ்வேறானதாக இருக்கும். இளமையில் உருவாகும் இந்த பழக்கம் வாழ்வின் இறுதி நாள் வரை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இளமையிலேயே நல்லதைக் கற்றுத் தருவது நமது கடமை. |
|
|
|