|
காகம் ஒன்று இறைச்சியைக் காலில் கவ்வியபடி, சாப்பிட இடம் தேடி அலைந்தது. கழுகுக் கூட்டம் ஒன்று காகத்தை துரத்தின. பதட்டமுடன் உயரே பறக்க காகம் முயற்சித்தது. கழுகுகளும் விட்ட பாடில்லை. இதைக் கவனித்த கருடன் ஒன்று, ” காகமே! உனக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டது
அதற்கு காகம், ’என்னை கொல்லும் நோக்கத்துடன் கழுகுக் கூட்டம் விரட்டுகின்றன’ என மரணபீதியில் சொன்னது. ’நண்பனே! உன்னிடம் இருக்கும் இறைச்சிக்காக துரத்துகின்றன. உன்னை கொல்ல அல்ல’ என்றது. காகமும் இறைச்சியை விட்டு விடவே, கழுகு கூட்டம் அதை நோக்கி சென்றன. புன்னகைத்த கருடன்,’இறைச்சி இருந்த வரை உனக்கு பிரச்னை; அதை விட்டதும் நிம்மதி’ என்றது. ஆமோதித்த காகம், ’ உண்மை தான! சிறிய இறைச்சியைக் கைவிட்டேன். இப்போது எனக்கு பரந்த வானம் எல்லையாகி விட்டது” என உற்சாகமாக பறந்தது.
கதை சொல்லும் நீதி
* காகம் கவ்விய இறைச்சி போல அகந்தை, கோபம், பொறாமை போன்ற தீயபண்புகள் துன்பத்தை விளைவிக்கின்றன. இவற்றை விட்டு விட்டால் நிம்மதி கிடைக்கும். * அகந்தை மிக்கவர்கள் போலி அடையாளத்தை உருவாக்கி ’நான் பெரிய ஆள், என்னை மதிக்க வேண்டும்’ என தற்பெருமையால் தவிக்கின்றனர். போலி கவுரவத்தை விட்டு வெளியேறுங்கள். * பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோரின் பேச்சு, செயலைக் கண்டு கோபம் கொள்கின்றனர். குறைகளை அன்புடன் சுட்டிக் காட்டித் திருத்துங்கள். * திறமை, அழகு, பணம் என பிறருடன் ஒப்பிட்டு பொறாமையால் நிம்மதி இழக்கின்றனர். இருப்பதில் திருப்தி கொள்ளுங்கள்.
|
|
|
|