|
ஒரு முறை சிரார்த்தத்தன்று, ராஜரிஷியான விஸ்வாமித்திரரை தன் வீட்டுக்கு அழைத்தார் மகரிஷி வசிஷ்டர். ”எனக்கு உணவில் 1,008 காய்கறி படைப்பதாக இருந்தால் வருகிறேன்” என எகத்தாளம் பேசினார் விஸ்வாமித்திரர். அரைமனதாக சம்மதித்தார் வசிஷ்டர். விஷயத்தை கேள்விப்பட்ட வசிஷ்டரின் மனைவி அருந்ததி, “கவலைப்படாதீர்கள் சுவாமி! ஒரே நேரத்தில் 1,008 கறி வகைகளை தயார் செய்ய எனக்கு தெரியும்” என்றாள்.இலையில் அமர்ந்த விஸ்வாமித்திரருக்கு 11 வகை காய்களை பரிமாறினாள் அருந்ததி.
“இதென்ன! 1,008 என சொல்லி விட்டு 11 மட்டும் இருக்கிறதே.” என உறுமினார். “மகரிஷியே! இதிலுள்ள பலாக்காய் 600 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பாகற்காய் 100 காய்களுக்கும் சமமானது. ஆக சாஸ்திரப்படி ஆயிரம் காய்கள் உள்ளன. மீதியுள்ள எட்டை சேர்த்தால் 1,008 வந்து விடும்” என்றாள். சாமர்த்தியம் மிக்க அருந்ததியின் விளக்கம் கேட்டு வாழ்த்தினர் விஸ்வாமித்திரர். பலா, பாகற்காய், பிரண்டையை அடிக்கடி சேர்க்க, ஆயிரம் காய்களை சாப்பிட்ட பலன் கிடைக்கும். |
|
|
|