|
குருதேவர் ஒருவர், கடினமான மந்திரம் ஒன்றை மனப்பாடம் செய்யும்படி சொன்னார். அந்த மந்திரத்தைத் தலைகீழாகத் திருப்பிச் சொன்னால், கொஞ்சம் எளிதாக இருப்பதை உணர்ந்த ஒரு சீடன், அப்படியே சொல்லிக் கொண்டிருந்தான். கவனித்துவிட்ட குரு, அவனை நிறுத்தச் சொன்னார். அப்படிச் சொன்னால் மந்திரம் எதிர்மறையான பலனைத் தரும் என்றார். ""எப்படி அதே மந்திரம் வேறு பலனைத் தரும்? கேட்டான் சீடன். பம்பரம் ஒன்றைக் கொண்டு வந்து, சுற்ற விட்டார் குரு. அது சுற்றுவதை கவனிக்கச் சொன்னார். பின்னர், அதே பம்பரத்தில் கயிறை எதிர்ப்புறமாகச் சுற்றி, மீண்டும் பம்பரத்தைச் சுற்றவிட்டார். இப்போது பம்பரம் எதிர்த் திசையில் சுற்றியது. ""அதே பம்பரம், அதே கயிறுதான்... ஆனால் கயிறை எதிர்த்திசையில சுற்றிய போது பம்பரத்தின் சுற்றும் திசையும் மாறியதல்லவா... அப்படித்தான் மந்திரங்களும், முறையாகச் சொல்லாவிட்டால் தவறான பலனைத் தரும்! சொன்னார், குருநாதர். |
|
|
|