|
புராண, இதிகாசக் கதைகளை சொற்பொழிவாற்றிய ஒருவர், இறந்த பிறகு மேல் உலகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டார். தன்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று, அவர் நம்பினார். ஆனால், அவரை நகரத்திற்கு அனுப்பினார்கள். உடனே அவர் கோபம் கொண்டு, சித்திரகுப்தனை நோக்கி, ""நான் சொன்ன புராணக் கதைகளைக் கேட்டு, எவ்வளவோ தீயவர்கள் திருந்தியிருக்கிறார்கள். பலரைத் திருத்தி நல்வழியில் நடக்கச் செய்த எனக்கு, சொர்க்கம் இல்லையா? என்று ஆத்திரத்தோடு கேட்டார். ""நீங்கள் கூறிய புராணத்திற்கும், கதைகளுக்கும் அந்த இடத்திலேயே கூலியாகப் பணம் பெற்றுக்கொண்டு விட்டீர்கள். மாறாக, நீங்கள் சொன்ன புராணக்கதையைக் கேட்ட மனிதர்கள், எந்தக் கூலியும் பெறாமல் தீய செயல்களைக் கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத்தான் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் பதில் கூறினார் சித்திரகுப்தன். |
|
|
|