|
பணக்காரர் ஒருவர் வட்டித்தொழிலை செய்தார். தினமும் குதிரையில் சென்று பணம் வசூலிப்பார். அவரிடம் நாய் ஒன்று இருந்தது. அதுவும் எஜமானருக்கு பாதுகாப்பாக செல்லும். ஒருநாள் பகலில் குதிரையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். களைப்பு தீர, வழியில் ஒரு மரத்தடியில் பணப்பையை தலைக்கு வைத்து இளைப்பாறினார். சற்று நேரம் தூங்கியதால், பொழுது சாய்ந்தது. திருடர்கள் குறுக்கிட்டால் என்ன செய்வது என பதறினார்.
குதிரை மீதேறிய அவர், பணப்பையை எடுக்க மறந்தார். இதைக் கவனித்த நாய் குரைத்தது. நேர காலம் தெரியாமல் குரைக்கிறதே என நாயை அடித்தார் அதுவோ விடுவதாக இல்லை. கோபத்தில் துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த நாய் அங்கேயே படுத்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் பணப்பை இல்லாததையும், அதை தெரிவிக்கவே நாய் குரைத்ததையும் உணர்ந்தார். மீண்டும் குதிரை மீதேறி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார். பணப்பைக்கு அருகில் நாய் கிடப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தினார். எஜமானரைக் கண்டதும் நாயின் உயிர் பிரிந்தது. நன்றியுள்ள நாயின் நினை வாக அங்கு திரி சூலம் நட்டு வழி பட்டார். |
|
|
|