|
எப்படியாவது அரிச்சந்திரனை பொய் பேசுபவன் என்று நிரூபணம் செய்யும் நோக்கில் அவரைப் பின் தொடர்ந்தார். விஸ்வாமித்ரர். காட்டின் வழியே சென்ற போது உடற்சோர்வும், மனச்சோர்வும் ஆக்கிரமிக்க, அந்த இரவில் சற்றே கண்ணயர்ந்தான். இதை கண்ட விஸ்வாமித்ரர், ""என்ன அரிச்சந்திரா, தூக்கமா? என்றார். அதற்கு அரிச்சந்திரன், ""ஆமாம்! சிறிது கண்ணயர்ந்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்றான். உலகில் பொது நியதியாக களைப்பு, அசதி மிக தூங்கி விட்டோமெனில், ""என்ன, தூக்கமா? என்று யாரேனும் கேட்டால், ""இல்லையே! விழித்துக்கொண்டுதானே இருக்கிறேன் என்பார்கள். இது முனைந்து சொல்லும் பொய்யன்று. நம்மை அறியாமல் கூறும் பொய். ஆனால் அரிச்சந்திரன் வாய் தவறியும் பொய் கூறவில்லை! அந்த முயற்சியிலும் தோற்றுப் போனார் விஸ்வாமித்ரர்.
|
|
|
|