Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

உங்களுக்கு ஹெலன் கெல்லரைத் தெரியுமா? 1880ல் அமெரிக்காவில் பிறந்த இவர், ஒன்றரை வயது வரைக்கும் எல்லா குழந்தைகளைப் போல இயல்பாக வளர்ந்தார். அதன்பின் உடல்நலக்குறைவால் பார்க்கும், கேட்கும் திறனை இழந்தார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனில்லை. கண், காது மூலமாகத் தானே உலகத்தை அறிய முடியும், படிக்க முடியும்? இவை இல்லாமல் எப்படி கல்வி கற்பது?  ஆனாலும் கெல்லரைப் படிக்க வைக்க ஆசிரியை ஆன்னி செல்லிவன் (அணணஞு குதடூடூடிதிச்ண).   விரும்பினார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே! கெல்லரின் கையில் ஒரு பொருளைக் கொடுத்து, அதன் பெயரை அவளது கையில் எழுதுவார் ஆசிரியை. எழுதும் போது பொருளின் பெயரை உச்சரித்தபடி, கெல்லரின் மற்றொரு கையின் விரலை தன் உதட்டில் வைத்து அந்த சொல் வரும் போது உதட்டின் அசைவை புரிய வைப்பார். இப்படியே ஒவ்வொரு சொல்லாக கற்றுக் கொடுத்தார். இப்படி படித்த ஹெலன் கெல்லரே பார்வை, கேட்புத்திறன் அற்ற உலகின் முதல் பட்டதாரியாக திகழ்ந்தார்.   

ஆன்னி செல்லிவனுக்கு கெல்லரை அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? டெலிபோனைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல்! கேட்புத்திறன் இல்லாதவர்களின் பள்ளி ஒன்றை நடத்திய இவரே, ஆன்னி செல்லிவனை சந்திக்கும்படி கெல்லரின் பெற்றோருக்கு வழிகாட்டினார். நியாயமான ஆசைகள், விடாமுயற்சியால் நிறைவேறும் என்பதற்கு கெல்லரின் வாழ்வே உதாரணம்.   ஆசை என்பது மனதின் எழுச்சி. ஆனால் அது எப்படிப்பட்டது என்பது முக்கியம். ராவணன் மாவீரன் தான் என்றாலும் அவனுக்கு வந்த ஆசை நியாயமானதா? மனைவி மண்டோதரி, தம்பி விபீஷணன் என பலரும் புத்தி சொல்லியும், அவனது மனம் விழித்தெழவில்லையே?  மனம் விழித்தெழுந்தால் மட்டுமே எது நியாயமான ஆசை, எது பேராசை என்ற தெளிவு கிடைக்கும்.   நியாயமான ஆசைகள் நிறைவேறத் தேவையான உடல், மன வலிமையை தரும்படி கடவுளிடம் வேண்டினால் நிச்சயம் நிறைவேறும். ’எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு’ என்று சிந்திக்காமல், ’நல்ல புத்தியைக் கொடு’  என வேண்டுவது நல்லது. கடவுள் அருள் இருந்தால் தான் எதுவும் நடக்கும். இல்லாவிட்டால் முயற்சி வீணாகி விடும்.   இந்நிலையில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருநாள் வண்டு ஒன்று கண்ணாடி ஜன்னலில் முட்டியபடி வெளியே செல்ல முயன்றது. என்ன தான் முயன்றாலும், கதவு மூடி இருப்பதால் செல்ல முடியவில்லை. ஜன்னலுக்கு மேலே கேபிள் டிவி ைலனுக்காக துவாரம் ஒன்று இருந்தது. அதன் வழியாக செல்லலாம் என்பது  வண்டுக்கு தெரியவில்லை.  மனிதர்கள் இந்த வண்டு போல இருக்கிறார்கள். ஒன்றை அடைய  முயற்சித்தும் வெற்றி பெறுவதில்லை. நமக்கும், நியாயமான ஆசைகளுக்கும் இடையே நிற்பது எது என்பதை அறிந்து அணுகுமுறையை மாற்றாவிட்டால் என்னாகும் என்பதை பாரதியாரின் கவிதையில் பாருங்கள்.

“எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல்-
பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்”

நமக்கும், விலங்குக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. இருவரும் ஆசைப்பட்டாலும் செய்ய வேண்டியது இது, செய்யக் கூடாதது இது என்னும் பகுத்தறிவு மனிதர்களுக்கு உண்டு. ஆனால் விலங்குகளுக்கு இல்லை. விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் அழகான உவமையால் இதை விளக்குகிறார். நீரில் வாழும் மீன் எதிரில் இருந்த  இரைக்கு ஆசைப்பட்டு  தூண்டிலில் சிக்குகிறது. மீனுக்கு நாக்கால் அழிவு. விட்டில்பூச்சி தீயிலிருந்து வரும் ஒளியைப் பார்த்தவுடன் அதில் விழுந்து மாய்கிறது. விட்டில் பூச்சிக்கு கண்களால் அழிவு.

சப்தம் கேட்டு இங்குமங்கும் ஓடும் மான்கள், வேடன் விரித்த வலையில் சிக்குகிறது. மானுக்குக் காதுகளால் அழிவு. வண்டுகள் மூக்கினால் மகரந்தம் நுகர்ந்தபடி பூவில் அமர, அதன் இதழ்கள் மூடிவிடும். அதன் பின் வெளியே வர முடியாது.  உடல் சுகத்திற்காக பழகிய பெண் யானையைத் துரத்தும் ஆண்யானை, பாகன் வெட்டிய பள்ளத்தில் தடுமாறி விழும். தொடுஉணர்ச்சியால் யானை சிக்குகிறது. புலன்களில் ஏதோ ஒன்றினால் இந்த உயிரினங்கள் அழிகின்றன. பகுத்தறிவை இழந்த மனிதனோ ஐம்புலன்களாலும் அழிகிறான்.

விழித்தெழுந்த மனதால் மட்டுமே ஆசைகளை வெல்ல முடியும். அப்படியென்றால் கோபம்? உலகையே தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர ஆசைப்பட்டவர் மாவீரன் அலெக்சாண்டர். அவர் ஒரு யோகி மீது கோபித்ததால், மறக்க முடியாத பாடத்தைக் கற்றார்.  திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar