|
மகாபாரதப் போரில், அர்ஜூனன் மகன் அபிமன்யுவை கொன்றான் ஜயத்ரதன். இவன் துரியோதனனின் தங்கையான துச்சளையின் கணவர். ஜயத்ரதனைக் கொல்ல முடிவெடுத்தான் அர்ஜுனன். இதையறிந்த துரோணாச்சாரியார், மூன்றடுக்கு வியூகம் அமைத்து தடுக்க முயன்றார். ஆனால் அதைப் பிளந்து கொண்டு அர்ஜூனன் முன்னேறினான். இதைக் கண்ட துரியோதனன் மீண்டும் ஆச்சாரியாரின் உதவியை நாடினான். அவர் அம்பு துளைக்காத கவசம் ஒன்றை அணிவித்து,“இனி அர்ஜூனனை எதிர்கொள்” என்றார்.
கவசம் இருந்ததால் துரியோதனனை அஸ்திரங்கள் தாக்கவில்லை. அவனது உடலில் எங்கெங்கு இடைவெளி இருக்கிறது என்று அர்ஜூனன் கவனித்தான். அந்த இடங்களை குறி வைத்து அம்புகளைத் தொடுக்க, தாக்கு பிடிக்க முடியாமல் போர்க்களத்தை விட்டு ஓடினான் துரியோதனன். ஒரு செயலை செய்யும் போது பெரும் தடைகள் வரலாம். ஆனால் அதை முடிக்க ஒரு வழி இருக்கும். அந்த வழியில் செயலாற்றினால் வெற்றி உங்களுக்கே! |
|
|
|