Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வைகுண்டமாக மாறிய ஆயர்பாடி!
 
பக்தி கதைகள்
வைகுண்டமாக மாறிய ஆயர்பாடி!

ஒரு நாள் அதிகாலை கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை நந்தகோபர் யமுனை நதியில் நீராடப் புறப்பட்டார். அப்போது இருள் விலகவில்லை. தண்ணீருக்குரிய தேவதையான வருணனின் தூதன், காலமற்ற நேரத்தில் நீராட வந்த நந்தகோபரை வருணனிடம் இழுத்துச் சென்றான். நீராடச் சென்ற தங்கள் தலைவரான நந்தகோபரைக் காணாததால், ஆயர்பாடியே கவலையில் ஆழ்ந்தது. யசோதை உள்பட எல்லோரும் செய்வதறியாமல் அழுதனர். கிருஷ்ணர் தன் யோக சக்தியால், அனைத்தையும் அறிந்தார். தந்தையை அழைத்தவரப் புறப்பட்டார். தன் மாளிகை நோக்கி வந்த கிருஷ்ணரைக் கண்ட வருணன், இரு கைகளையும் கூப்பி வரவேற்றான். ""பகவானே! இன்று உங்களை தரிசிக்க என்ன புண்ணியம் செய்தேன்! யார் என  அறியாமல் தங்களின் தந்தையை சிறை பிடித்த என் தூதனை மன்னியுங்கள். எங்களுக்கு ஆசி கொடுங்கள்! என்று வேண்டினான்.

வருணனின் வணக்கத்தை ஏற்றதோடு தூதுவனின் செயலையும் மன்னித்தார், கிருஷ்ணர். நந்தகோபரோடு திரும்பிய கிருஷ்ணரைக் கண்ட ஆயர்பாடி மக்கள், ""பகவானே! நாங்கள் செய்த புண்ணியத்தால் உன்னோடு உறவாடும் பாக்கியம் பெற்றோம். நீ நிரந்தரமாக வாசம்புரியும் வைகுண்டத்தை இப்போது தரிசிக்க விரும்புகிறோம் என்றனர். வைகுந்தவாசனாக தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தை அப்போது அவர்களுக்குக் காட்டியருளினார். பகவான் கிருஷ்ணன். அவரது வரவால் ஆயர்பாடியே வைகுண்டமாக மாறியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar