Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வினைப்பயன்!
 
பக்தி கதைகள்
வினைப்பயன்!

காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப்பெண், ஒருத்தி தனது கணவருடன் வாழ்ந்து வந் தாள். வெகு நாட்களாக அத்தம்பதியருக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து, விரதங்கள் பல அனுஷ்டித்து ஒரு குழந்தை பிறந்தது. அதை இருவரும் சீராட்டிப்  பாராட்டி வளர்த்தனர். ஒரு நாள் தனது பாலகனுக்கு உணவூட்டி உறங்க வைத்துவிட்டு, நீர் எடுத்து வர அரு விக்குச் சென்றாள் சுபத்ரை. மீண்டும் குடிலுக்குத் திரும்பியபோது, அவளுடையபாலகனை ஒரு நாகம் தீண்டியிருந்தது கண்டு திடுக்கிட்டாள். அவன் உடலில் விஷம் ஏறிஉயிருக்கு மன்றாடுவதைக் கண்டு தரையில் விழுந்து கதறினாள். விஷயமறிந்து அவள் கணவர் ஓடி வந்தான். அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து,  பாம்பைப் பிடித்து சுபத்ரையிடம் இழுத்து வந்தான். ""சுபத்ரை, நம் குழந்தையைத்  தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? அப்போதுதான் நம் துக்கம் கொஞ்சமாவது ஆறும்” என்றான் வேதனையும் கோபமும் கொப்பளிக்க.

இந்த பாம்பைக் கொன்றுவிட்டால் எனது குழந்தை உயிர்த்தெழுமா?” -சுபத்ரை.
இப்பாம்பை கொல்லாவிட்டால் மாத்திரம் நமது குழந்தை உயிர்த்தெழுமா?”
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல்
போகுமா?” - சுபத்ரை.
பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை  குறைந்துவிடும் அல்லவா?” என்றான் அவள் கணவன்.

இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது; மூடா! அவள் என்னைக்  கொல்ல வேண்டாம் என்கிறாள். நீ கொல்வேன் என்று அடம் பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார். இங்கு நீ, உனது மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். நான்  தீண்டிக்கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிரு க்கலாம் அல்லவா? உங்கள் குழந்தையை மட்டும்தானே தீண்டினேன். அதுவும் என்னை  ம்ருத்யு தேவதை ஏவியதால்தான் அந்தக் குழந்தையைத் தீண்ட வேண்டியதாயிற்று.  இதில் எனது தவறு எதுவுமில்லை ” என்றது.

""யார் அந்த ம்ருத்யு?” என்றான் வேடன்.

ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்ற, ""குழந்தை இறப்புக்கு நீயா காரணம்?” என்றான் வேடுவன்.

""நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். பாம்பை ஏவி இந்தக் குழந்தையைக்  கடிக்கச் செய்தேன்”-ம்ருத்யு தேவதை.

""காலன் என்பவன் யார்?” என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான்.

""இந்தக் குழந்தை இறப்புக்கு நீதான் காரணமா?” என்றான் வேடுவன்.

""நான் காரணமில்லை, என்னை பகவான் ஏவினான். நான் ம்ருத்யு தேவதையை
ஏவினேன்.ம்ருத்யு தேவதை பாம்பை ஏவ, பாம்பு குழந்தையைக் கடித்தது” என்றான் ய மதர்மன்.

""உன்னை ஏவிய அந்த பகவான் யார்?” என வேடுவன் கேட்க, ஸ்ரீமந் நாராயணன்
அங்கே காட்சியளித்தார்.

"" எல்லாவற்றுக்கும் காரணம் நீதானா?” என்றான் வேடுவன்.

""மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பதே விதி. பாம்பு கடித்து  உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி. அது நிர்ணயமானதால் நானே நடத்தி  வைத்தேன். எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள் ” என்றார்  பகவான்.

""நான் நம்ப மாட்டேன்... குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன்”  என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க, தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன்.

வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு  இருந்தது. அது அவனைத் தீண்டி விட, உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கிக்  கீழே விழுந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவனது மனைவி, உடனடியாகக் காட்டுக்குள் ஓடி, மூலி கையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில்சாற்றை ஊற்றினாள். வேடுவன்  சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக்கொண்டான். இந்நிகழ்வைப் பார்த்துக்  கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்.

பகவான் சொன்னார்; ""பாம்புக்கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும்  என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தனது குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது, அவளுக்கு ஏன் அந்த ஞானம்  வரவில்லை? மூலிகைச் சாறு கொடுத்துக் குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை?  ஆனால், பாம்பு உன்னைக் கடித்தபோது காப்பாற்றி விட்டாள். அதற்கு என்ன காரணம்?  பாம்பு கடித்து பிழைக்க வேண்டும் என்பது உனது விதி. பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உனது குழந்தையின் விதி. அது அவரவர் வினைப்பயன்தான்”  என்றார். பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar