Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் செல்வந்தன் ஆகமுடியும்?
 
பக்தி கதைகள்
யார் செல்வந்தன் ஆகமுடியும்?

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். வழியில் ஒருவன் கடவுள் பெயரையும், இன்னொருவன் அரசன் பெயரையும் சொல்லி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். அதற்கு அரசன் காரணம் கேட்டபோது, கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், ""இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன்தான். அவன் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும். அதனால்தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான். மற்றொரு பிச்சைக்காரன், ""இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன். ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே. அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெற முடியும். அதனால்தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்.

அரசன் தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்.

""அரசே! முதல் பிச்சைக்காரன் சொன்னதுதான் சரி. இறைவன் அருள் இருந்தால்தான் நிரந்தர செல்வத்தைப் பெறமுடியும் என்றார், அமைச்சர்.

அரசனும், "இறைவன் அருளா? அல்லது அரசனின் அருளா? என்று சோதித்துப் பார்க்கத் தீர்மானித்தான்.

சில நாட்களில் அந்நாட்டில் கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான் அரசன். பரிசைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.

அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். அரசன் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான். கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோருக்கும் போலவே துணியும் பரங்கிக்காயும் மட்டும் பரிசளித்தான்.

சில நாட்கள் கழிந்தன. அரசன் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன், சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதைக் கண்ட அரசனுக்கு வியப்பு மேலிட்டது. "தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க, வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்க வேண்டிய காரணம் என்ன? என்று அரசனுக்குத் தோன்றியது. உடனே அரசன் அந்தப் பிச்சைக்காரனிடம், ""நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே. அதற்குப் பிறகும் நீ
பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டான்.

""அரசே! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள். அதை நான் ஐந்து வெள்ளிக் காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்து எத்தனை நாட்கள் நான் உண்ண முடியும்? அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்து விட்டேன் என்றான்.

அதைக் கேட்ட அரசன் கோபமுற்று, ""அடேய் மூடனே! நான் உனக்குப் பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகள் வைத்திருந்தேனே. நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே! என்று அவனைத் திட்டி விட்டு நகர்ந்தான்.

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனைக் கண்டான். அவன் இறைவன் பேரைச் சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்துகொண்டான். அரசன் அவனிடம் சென்று, ""ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? இப்போது எப்படி செல்வந்தனாகி விட்டீர்கள்? என்று கேட்டான்.

அதற்கு அவனும், ""அரசே! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக் காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன். இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன் என்று கூறினான்.

இறைவன் அருள் இல்லையென்றால் வாழ்வில் எந்த வளமும் பெற முடியாது என்பதையும், நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருள் தேவை என்பதையும் அரசன் உணர்ந்து கொண்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar