Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமருக்கு உதவிய முருகபக்தன்
 
பக்தி கதைகள்
ராமருக்கு உதவிய முருகபக்தன்

கங்கை கரையோரம், குடிசையில் வேதம் கற்ற  முனிவரும், அவரது மகனும் வாழ்ந்தனர். ”தந்தையே! கடவுளர்களில் சிறந்தவர் யார்?” என மகன் கேட்டான்.
”வேதம் எல்லாம் போற்றும் கடவுள், முருகப்பெருமான். அவரை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் நீயும் முருகனை வழிபடு” என்றார்.

ஒரு சமயம் முனிவர் வெளியூர் சென்ற நேரத்தில், மன்னர் ஒருவர் வந்தார்.  முகம் வாடியிருந்த அவர், ”தம்பி! முனிவர் இருக்கிறாரா?” எனக் கேட்டார்.

”நீங்கள் யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்? அப்பா ஊரில் இல்லையே!” என்றான் முனிவரின் மகன்.

”எங்கு போனாலும் விதி என்னை துரத்துகிறதே!. உன்னிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது! நாளை மாலை வருகிறேன்” என்று சொல்லி கிளம்பினார்.  
சிறுவன் தடுத்து, ”மன்னா! உதவி செய்ய பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. விளக்குடன் இருண்ட அறைக்குள் பெரியவர் சென்றாலும், சிறியவர் சென்றாலும் உள்ளே வெளிச்சம் பரவி விடும்! எனவே வந்த விஷயத்தை என்னிடம் சொல்லுங்கள். நிச்சயம் தீர்வு சொல்வேன்” என்றான் நம்பிக்கையுடன்.
அவனது பேச்சு மன்னரைக் கவர்ந்தது.

’புலிக்கு பிறந்த புலி’ என்று எண்ணியபடி, ”தம்பி! நான் வேட்டையாட பாணம் தொடுத்தேன். அது குறி தவறி ஒரு முனிவர் மீது பாய்ந்தது. இப்போதோ கொலைப்பாவம் துரத்துகிறது. போக்குவதற்கு வழி சொல்வாயா” என்றார் மன்னர்.
”பரிகாரம் இருக்கிறதே! கங்கை நதியில் மூழ்கி, வடக்கு நோக்கி எழுந்து, மூன்று முறை ’முருகா’ என்று சொல்லுங்கள். பாவம் ஓடி விடும்” என்றான். மன்னரும் அவ்வாறே செய்து பாவம் நீங்கப் பெற்றார்.

மறுநாள் முனிவர் குடிலுக்கு வந்தார். வாசலில் தேர் வந்து சென்ற தடம் பதிந்திருந்தது. மன்னர் வந்த விஷயம் முழுவதையும் கேட்டு அறிந்த முனிவருக்கு, மகன் மீது கோபம் எழுந்தது.   

”உன்னைப் போய் மகனாகப் பெற்றேனே!  ஒருமுறை ’முருகா’  சொன்னாலே ஆயிரம் பிரம்மஹத்தி போகுமே! நீ மூன்று முறை சொல்ல வைத்து, மந்திரத்தின் பெருமையைக் குறைத்து விட்டாயே! அடுத்த பிறவியில் பூலோகத்தில் வேடனாகப் பிறக்க கடவது” எனச் சபித்தார். சிறுவன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டான்.

”என் சாபம் பலித்தே தீரும். அடுத்த பிறவியில் முருகனின் திருநாமங்களில் ஒன்றான ’குகன்’ என்னும் பெயருடன் வேடனாகப் பிறப்பாய். ராமபிரானுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் பெறுவாய்”  என்றார். இச்சிறுவனே மறுபிறவியில் குகனாகப் பிறந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar