|
மாவீரர் நெப்போலியன் தன் படைத்தளபதிகளை விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நெப்போலியன் வந்து விட்டார். ஆனால் தளபதிகள் வரவில்லை. விருந்து தொடங்க ஒரு விநாடி இருந்த போது, பரிமாறுபவரை அழைத்து, “எனக்கு பரிமாறுங்கள்,” என்றார். அவர் சாப்பிட்டு எழுந்திருக்கவும், படைத் தளபதிகள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. ”விருந்துக்குரிய நேரம் முடிந்து விட்டது. இது பணிக்குரிய நேரம். வாருங்கள் என் பின்னால்” என்று சொல்லி நடந்தார் நெப்போலியன். தளபதிகள் தலைகுனிந்தனர்.நெப்போலியனின் நேரம் தவறாமையால் தான் ஐரோப்பா கண்டமே அவரது காலில் கிடந்தது.
|
|
|
|