|
தான் பெரிய அறிவாளி என ஆணவம் கொண்டிருந்தார் பண்டிதர் ஒருவர். துறவி ஒருவரை அவர் சந்திக்கச் சென்றார். பண்டிதருக்கு கொடுக்கப்பட்ட ஆசனம் தாழ்வான இடத்தில் இருந்ததால், அவருக்கு கோபம் வந்தது. “உயர்ந்த இடத்தில் ஆசனம் தராமல் அவமானப்படுத்தி விட்டீரே” என்றார் பண்டிதர். ”என்னுடைய ஆசனத்தில் நீங்கள் அமருங்கள். உங்கள் ஆசனத்தில் நான் அமர்கிறேன். இதற்காக ஏன் வருந்துகிறீர்கள்?” என்றார் துறவி. சமாதானம் அடைந்தார் பண்டிதர். நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் உள்ள குருவிகள் எழுப்பிய ஒலி, இடைஞ்சலாக இருந்தது. பண்டிதர் மரத்தை அண்ணாந்து பார்த்தார். “குருவிகள் மெத்த படித்தவை போல! அதனால் உங்களையும் விட, உயர்ந்த இடத்தில் இருந்து பேசுகின்றன” என்றார் துறவி. பண்டிதர் முகத்தில் ஈயாடவில்லை. |
|
|
|