|
தன் அவதார காலம் முடிந்து வைகுண்டம் புறப்பட்டார் ராமர். அப்போது அனுமன் தனித்து நின்றார். ’நீ வரவில்லையா?”என அழைத்தார் ராமர். அதற்கு, ”எல்லாம் இருந்தாலும் ராமநாமம் கேட்க வைகுண்டத்தில் வாய்ப்பில்லையே. ராமானந்தம் இல்லாத வைகுண்டத்தை விட, பூலோகத்தில் இருப்பதே மேல். பூமியில் தங்கி ராமநாமத்தைச் சொல்லப் போகிறேன்” என்றார் அனுமன். அதனால், இன்றும் ராமாயண பாராயணம் செய்யும் போது ஒரு பலகையை அனுமனுக்காக வைப்பர். கண்ணுக்குத் தெரியாமல் சூட்சும வடிவில் அவர் அங்கு எழுந்தருள்வார்.
|
|
|
|