|
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், இந்திர லோகமே இருளில் மூழ்கியது. காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, நவநிதிகள் எல்லாம் மறைந்தன. மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் இந்திரன். “தேவேந்திரா....! உன் செல்வம் அனைத்தும் பாற்கடலில் மறைந்தன. அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தால் அவை வெளிப்படும்” என்றார் விஷ்ணு. மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் உதவியுடன் தேவர்கள் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மலை நிலை குலைந்து சாய்ந்தது. அதை தாங்கிப் பிடிக்க, மகாவிஷ்ணுவே ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்றார். விஷ்ணுவின் தியாகம் கண்டு மலை வியந்து, விஷ்ணுவின் முதுகில் சுழலும் போது மட்டும் சுமை தெரியாமல் சுகத்தை தந்தது. இதன் பின்னர் இந்திரனின் செல்வங்கள் பாற்கடலில் இருந்து வெளிவந்தன.
|
|
|
|