|
ஏதோ இந்தக் காலத்தில் படிப்புக்கு அதிகம் செலவழிப்பதாக நினைக்கிறோம். புராண காலத்திலேயே ஒரு பென்சிலுக்கு ஆயிரம் பொன் விலை கொடுத்தவர் விநாயகர். வியாசர் விவரிக்க இருக்கும் மகாபாரத கதையை பதிவு செய்ய வேண்டும் என விநாயகர் விரும்பினார். ஆனால் அவரிடம் ஏடோ, எழுத்தாணியோ இல்லை. விநாயகர் ஏட்டில் எழுதுவது போன்ற ஓவியம் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அவர் ஏட்டில் எழுதவில்லை. மகாபாரதத்தை எழுத ஏராளமான ஏடுகள் வேண்டும் என்பதால், இமயமலையின் பாறைகளில் எழுதுவது என முடிவு செய்தார். பாறையில் எழுத கனமான எழுத்தாணி வேண்டுமே! அதற்கும் அசரவில்லை. வலிமையான தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கினார். யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர். தந்தத்தின் மதிப்பால் உருவான பழமொழி தானே இது. உலகிலேயே ஒரு எழுத்தாணிக்காக (பென்சில்) ஆயிரம் பொன் செலவழித்தவர் விநாயகர் மட்டுமே.
|
|
|
|