|
ஆந்திராவிலுள்ள கடப்பாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விஷ்ணு பக்தனாக இருந்தான். அவனது தந்தையான நாராயண சூரியோடு வயலில் வேலை செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ஏழுமலையை தரிசிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருந்தான். ஒருநாள் பக்கத்து கிராமம் சென்று வைக்கோல் வாங்கி வர அனுப்பினார் தந்தையார். ஆனால் சிறுவனோ திருப்பதியை நோக்கி நடந்தான். பசியும், தாகமும் அதிகரித்தது. மலையின் மீதும் ஏற முடியவில்லை. ’வெங்கடேசா’ என அழைத்தான். பசியை போக்க பத்மாவதி தாயாரை அனுப்பினார் ஏழுமலையான். எளிய பெண் வடிவில் தோன்றி உணவளித்து மறைந்தாள். உண்மையை உணர்ந்த சிறுவன், வாழ்நாள் முழுவதும் ஏழுமலையானுக்கே தன்னை அர்ப்பணித்தார். இவர்தான் பிற்காலத்தில் அன்னமாச்சாரியார் என்னும் பக்தராக விளங்கினார். ’வெங்கடாசல மகாத்மியம்’ என்னும் நுாலை எழுதியதும் இவரே. |
|
|
|