|
நண்பனின் வீட்டுக்குச் சென்றான் ஒருவன். ""வா.... வா.... உன்னைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு?” என்று அன்புடன் வரவேற்ற நண்பன், ""நானே உன் வீட்டுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, நேரமே கிடைக்க மாட்டேங்குது, இப்பவும் பாரேன்... அவசரமா வெளியேதான் கிளம்பிட்டிருக் கேன்!” நம்மாளுக்குக் குழப்பம், இதைப் புரிந்துகொண்ட நண்பன், ""தப்பா எடுத்துக்காதடா! பெரிய இடத்துக் கல்யாணம்; தவிர்க்க விரும்பலை! நீ இங்கேயே இரு. தலையை காட்டிட்டு வந்துடறேன்!” என்றான். சரி... சரி! போயிட்டு சீக்கிரமா வா! என்று வழியனுப்பி விட்டுக் காத்திருந்தான் நம்மவன். கல்யாணத்துக்குப் போனவன் மாலையில்தான் திரும்பினான்.
""என்னடா ஆச்சு? உடனே திரும்பிடுவேன்னு சொல்லிட்டுப்போன...?” என்றான் இவன். ""என்னடா பண்றது? நானும் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா, விடவே மாட்டேன்னுட்டாங்க!” என்று வருத்தத்துடன் சொன்னான் நண்பன். நம்மாளுக்கு ஆச்சரியம்... ""அட... அவ்ளோ உபசரிப்பா உனக்கு? மாப்ளே வீடா... பொண்ணு வீடா.. உனக்கு வேண்டப்பட்டவங்க யாருடா?” என்று கேட்டான். ரெண்டு தரப்பும் இல்லடா....?”... நண்பன். ""அப்புறம்...?” என்று நம்மவன் கேட்க, சலிப்புடன் பதில் சொன்னான் கல்யாணத்துக்கு ப்போன நண்பன் ""அடப்போடா... எவ்வளவோ போராடிப் பார்த்தேன்; என்னை உள் ளேயே விடமாட்டேன்னுட்டானுங்க!” இதைக் கேட்டு நம்மவன் வாயடைத்து நின்றான்!
ஆன்மிக உலகிலும்.. உள்ளே நுழைய வேண்டிய சூழலும் உண்டு; வெளியே வரவேண்டிய சூழலும் உண்டு. புற உலகில், பொருளாசையை விட்டு வெளியேறுவது நல்லது; அக உலகில், அருளாசையை நாடி உள்ளே செல்வது நல்லது. ஆனால் இன்றைக்கு, வெளியே நின்றபடி, எட்டிப் பார்க்கிற அளவில் மட்டுமே பலரது தகுதி உள்ளது. இதில் கூத்து என்ன தெரியுமா? இவர்கள்தான், எனக்கு ஆன்ம தரிசனம் கிடைத்து விட்டது என்று மார்தட்டிக் கொள்கின்றனர். இதை நம்பி, பலரும் இவர்களுக்குப் பின் னே செல்கின்றனர்.! நீங்கள் உங்களுக்குள் நுழைய வேண்டும் எனில், எவரது பின்னேயும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. உள்ளே இருக்கும் அகந்தை யை வெளியேற்றினாலே போதும்; உங்களுக்கான கதவு தாமாகவே திறக்கும்! |
|
|
|