|
பணக்காரர் ஒருவருக்கு நிறைய சொத்து இருந்தும், அவருக்கு பணத்தாசை மட்டும் தீரவில்லை. இரவில் தூக்கம் இன்றி தவித்தார். அந்த ஊருக்கு புதிதாகச் சாமியார் ஒருவர் வந்தார். அவர் பலரின் பிரச்னைகளை தீர்த்ததால் பணக்காரரும் அவரை சந்திக்க சென்றார். சாமியாரை விழுந்து வணங்கினார்.
“ மகனே! உனக்கு என்ன குறை?” எனக் கேட்டார் சாமியார்.
“சுவாமி! தங்களின் ஆசியால் பெரும் பணக்காரனாக நான் வாழ வேண்டும் என வாழ்த்துங்கள்” என்றார்.
சிரித்தபடி “அன்பனே! ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்பதைக் கேள்விபட்டதில்லையா? மனம் ஒரு குரங்கு. அதை அடக்காவிட்டால் அது தாவிக் கொண்டே திரியும். செல்வத்தின் பயன் பிறருக்கு உதவுவது தான். எல்லாம் எனக்கே... என்ற சுயநல எண்ணத்தை விட்டு விடு. இழக்க கூடாத ஒரே செல்வம் நிம்மதி மட்டுமே. தினமும் கைபிடி அரிசியாவது ஏழைக்கு கொடு. இந்த வாழ்க்கை முடிந்த பின் உன்னுடன் வரப் போவது பாவம், புண்ணியம் மட்டுமே!” எனசொல்லி திருநீறு பூசினார். மனம் திருந்திய பணக்காரரோ தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தார்.
|
|
|
|