Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிள்ளை பெற்ற ரகசியம்
 
பக்தி கதைகள்
பிள்ளை பெற்ற ரகசியம்

அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்னனும் பிறந்தனர். இவர்களின் பிறப்புக்கு வேறொரு காரணமும் சொல்வதுண்டு.  ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒருவன் இல்லாவிட்டால் வேறொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார்.

அதற்காகவே நான்கு மகன்கள் இருக்கட்டும் என எண்ணியதாக ஒரு செய்தி உண்டு. ராமாயண காலத்திற்கு முன்பே, காலம் சென்ற பெற்றோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதுவும் கயாவில் செய்வது சிறப்பு என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது. தசரதருக்கு அந்திம கிரியை செய்யும் பாக்கியம்  நான்காவது மகனான சத்ருக்னனுக்கு கிடைத்தது.  ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமர் பட்டாபிேஷகம் செய்த பிறகு, கயாவில் தர்ப்பணம் செய்தது குறிப்பிடத்தக்கது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar