|
அழகாபுரி அரசருக்கு முட்டாள் நண்பன் ஒருவன் இருந்தான். அந்த நண்பன் மிக நல்லவன். அரசருக்கு துன்பம் என்றால் தாங்க மாட்டான். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற இடத்தில், அரசரின் காலில் முள் குத்தியதை பார்த்து, “உங்கள் காலில் குத்திய முள்ளை என் கண்ணில் குத்தியதாகக் கருதுகிறேன்“ என வருந்தினான். மனம் நெகிழ்ந்த அரசர் மெய் காப்பாளராக நியமித்தார். இதையறிந்த அமைச்சர், “அரசே! முட்டாளுடன் நட்பு வேண்டாம். அது ஆபத்தை விளைவிக்கும்“ என்றார். அரசருக்கு முட்டாளின் விசுவாசமே பெரிதாக தோன்றியது. ஒருநாள் நந்தவனத்தில் உறங்கிய போது அரசனின் கழுத்தில் ஈ ஊர்ந்தது. “அரசரின் உறக்கத்தை கெடுக்க வந்தாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று சொன்ன முட்டாள் வாளால் விரட்ட, ஈ பறந்தது. ஆனால் அரசனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. நல்லவனாக இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பது அப்போதுதான் அரசருக்குப் புரிந்தது. |
|
|
|