|
கணவரை இழந்த ராணி, சமையல் வேலை செய்து சம்பாதித்தாள். அவளது ஒரே மகள் வேணி படித்து வந்தாள். உடல்நலக் குறைவால் ராணியால் வேலைக்கு செல்ல முடியவில்லை. செல்வந்தரான சுந்தரம் வீட்டில் அன்னதானம் கொடுப்பதை அறிந்த வேணி, தினமும் உணவு பொட்டலம் வாங்கி வந்தாள். ஒருநாள் கூட்டம் முண்டியடித்தபடி இருந்தது. வேணியோ பொறுமையுடன் வரிசையில் நின்றாள். அதைக் கவனித்த சுந்தரம், இரண்டுக்கு மூன்றாக பொட்டலங்களைக் கொடுத்தார். மறுநாள் வேணியின் நல்ல குணத்தை சோதிக்க எண்ணி, தங்க நாணயத்தை உணவுக்குள் மறைத்து வைத்தார். பொட்டலத்தை பிரித்த ராணி, “கடவுள் கண் திறந்துட்டார். இனி வீட்டுச் செலவுக்கு இந்த பணம் உதவும்“ என்றாள் மகளிடம். “மற்றவர் பணம் நமக்கு வேண் டாம்மா! உரியவரிடம் சேர்ப்போம்“ என சுந்தரத்திடம் ஒப்படைத்தாள். அவளை பாராட்டியதோடு, அவளது படிப்புச் செலவையும் ஏற்றார். |
|
|
|