|
அந்தக் கிராமத்துக்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். தினமும், கிராம எல்லையிலுள்ள ஆல மரத்தடியில் அமர்ந்து, மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அன்றும், எங்கும் நிறைந்த இறைவனின் சாந்நித்தியத்தைக் குறித்துப் பேசினார். அப்போது ஒருவர் துறவியிடம் கேட்டார்; ""சுவாமி! இறையுணர்வு கொள்ளவேண்டும் எனில், எதற்காக கோயில் செல்லவேண்டும். இறைவன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்கிறீர்களே.. எனில், கோயிலுக்குச் சொல்லாமலேயே இறையுணர்வை அடைய முடியாதா?” துறவி பதிலேதும் கூறாமல் அவரிடம், ""குடிக்கத் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் ஓடிச்சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். உடனே துறவி, ""நான் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு?” என்றார். அவர், ""சாமி! தண்ணீர் எடுத்துவர ஆதாரம் வேண்டுமல்லவா? வெறும் நீரை மட்டும் கொண்டு வர இயலாதே... என்றார். துறவி புன்னகையோடு பதில் சொன்னார்; ""அதேபோல், இறையுணர்வு கொள்ள கோயில் தேவை. கோயில் ஒரு கருவி; கோயிலே ஆதாரம்!”
|
|
|
|