Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள்!
 
பக்தி கதைகள்
ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள்!

ஒருமுறை திருதராஷ்டிரன் தன் சகோதரர் விதுரரிடம், “மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்பர். எனினும் நூறு வருடங்களைக் கடக்கும் மனிதர்கள் அரிது என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன ” என்று கேட்டார். விதுரர் பதில் சொன்னார். “அரசே... மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதலாவது கர்வம். பலரும், இந்த  உலகில் தானே கெட்டிக்காரன், மற்றவரெல்லாம் முட்டாள் என்று நினைக்கிறார்கள்.  ஆகவே, கர்வம் இல்லாமலிருக்க, தன்னுடைய குற்றம் குறைகளைப் பார்க்கவேண்டும்;  பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாள் - அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும்  வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான். மூன்றாவது வாள் - தியாக உணர்வின்மை, அதீத ஆசையே மனிதனின் தியாக  உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும். நான்காவது வாள் - கோபம், கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி, கோபம்  வந்துவிட்டால், தர்மம் எது, அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது; பாவங்களைச்  செய்ய நேரிடுகிறது. ஐந்தாவது வாள் - சுயநலம், சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம், சுயநலம்  கொண்டவன் பாவம் செய்யத் தயங்குவதில்லை. ஆறாவது வாள் - துரோகம், இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு. இந்த ஆறு விஷயங்களிலிருந்தும்  ஒருவன் விலகி வாழ்ந்தால், நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar