|
ஜென் மாணவன் ஒருவன் தன் குருவிடம் வந்து, ""குருவே, எனக்குக் கட்டுக்கடங்காமல்கோபம் வருகிறது. அதிலிருந்து விடுபட ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். குரு அவனிடம், ""எங்கே .... உனது கோபத்தை எனக்குக் காட்டு பார்க்கிறேன்” என்றார். ""உடனே என்னால் காட்ட முடியாது” என்றான் அவன். ""ஏன்?” ""அது திடீரென்றுதான் வரும்.” ""அப்படியானால் அது உனது இயல்பான குணம் அல்ல. கோபம் உனது இயல்பான குணமாக இருந்திருந்தால், அதை உன்னால் எப்போது வேண்டுமானாலும் காட்ட முடியும். உனக்குச் சொந்தம் இல்லாத ஒன்று உனது வாழ்க்கையைக் கெடுக்க ஏன் அனுமதிக்கிறாய்” என்று கேட்டார் குரு. அதன் பிறகு அந்த மாணவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் குரு சொன்னதே நினைவுக்கு வந்தது. காலப்போக்கில் அவன் அமைதி நிரம்பியவனாக மாறினான்.
|
|
|
|