|
பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின் காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ""வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்” என்றார் அவரது குருநாதர். பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார். மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது கங்காநதி. அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின் எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை வெளிவந்தது. அதன்பின் கங்கை "ஜன்ஹு என்னும் முனிவரின் ஆசிரமத்தை நாசப்படுத்தியது. முனிவர் "ஜன்ஹு தவசக்தியால் கங்கையை தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம் தடைப்பட்டது. தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன். முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின் முன்னோருக்கு பலன் அளித்தது. வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால் தான். இதை "பகீரதப் பிரயத்தனம் என்கிறார்கள். |
|
|
|