|
ஆஞ்சநேயர் என்பதற்கு "அஞ்சனை மைந்தன் என பொருள். "தளராத முயற்சி என்ற பொருளையும் அவரது வாழ்வு உணர்த்துகிறது
சிறுவனாக இருந்த போது, அவர் சூரியனைப் பழம் எனக் கருதி பறிக்க முயன்று, இந்திரனிடம் அடி வாங்கினார். ஆனாலும், விடாப்பிடியாக அதே சூரியனிடம் இலக்கணம் கற்றார். சூரியன் உதிக்கும் உதயகிரியில் இருந்து மறையும் அஸ்தகிரி வரை, சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தபடியே பாடம் கேட்டார். வாலியால் பாதிக்கப்பட இருந்த சுக்ரீவனை காப்பாற்ற உதவினார்.
இலங்கை செல்லும் வழியில் சுரசை உள்ளிட்ட அரக்கிகளை வென்றார். ராவணனின் உத்தரவால் வாலில் தீ வைத்த போது, அதை அவர்களுக்கே திருப்பினார். இலங்கையே துவம்சமானது.
ராம, லட்சுமணருக்காக மருந்து மலையான சஞ்சீவியையே துாக்கி வந்தார். இப்படி தளராத முயற்சியுடன் செயல்பட்டவர் அவர். அவரைப் போல தளராத முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி வாகை சூடலாம். |
|
|
|