Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குளித்தால் புனிதமா?
 
பக்தி கதைகள்
குளித்தால் புனிதமா?

பெரியமனிதர் ஒருவர், வேலைக்காரனைக் கூப்பிட்டு, ""புறப்படு” என்றார்.

""எங்கே ” என்றான் வேலைக்காரன்.

""புனிதமான இடங்களுக்கெல்லாம் போய் வரலாம். புண்ணிய நதிகளிலெல்லாம் நீராடி வரலாம்.”

""குளிப்பதற்கு அவ்வளவு தூரம் போகணுங்களா முதலாளி?”

""அட முட்டாளே! ஒன்றைப் புரிந்துகொள்... புண்ணிய நதிகளில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் எல்லாம் போகும். நாம் புனிதமடையலாம்!”

""அப்படின்னா... போயிட்டு வரலாங்க.”

""வெளியூர்ச் சாப்பாடு எனக்குச் சரிப்படாது... அதனாலேதான் வேளாவேளைக்குச்  சமைச்சுப் போட உன்னை அழைச்சுட்டுப் போறேன். ஒரு மாசத்துக்குத் தேவைய õனதையெல்லாம் மூட்டை கட்டி எடுத்துக்கோ!”

அவர்கள் இருவரும் புறப்பட்டார்கள். புனிதத் தலங்களுக்கெல்லாம் போனார்கள்.  புண்ணிய நதிகளில் எல்லாம் நீராடிவிட்டு ஒரு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பினார்கள்.  வீட்டுக்கு வந்தவுடன் அந்த வேலைக்காரன் தன் முதலாளிக்கு வேண்டியதை அவசர  அவசரமாகச் சமைத்து முடித்துவிட்டு, ""சாப்பிட வாங்க முதலாளி!” என்றான்.

பசியோடிருந்த முதலாளி வேகமாக வந்து உட்கார்ந்தார்.

வேலைக்காரன் பரிமாறினான்.

முதலாளியின் முகம் மாறியது.

முகம் சுளித்தபடி, ""என்னடா சமையல் பண்ணியிருக்கே.. துர்வாசனை... சகிக்க முடியல!” என்று சத்தம்போட்டார். அவன் பணிவோடு அவர் முன்னால் வந்து நின்று  சொன்னான். ""ஐயா... புனிதமான காய்கறிகளைக் கொண்டுதான் இன்னிக்குச் சமையல்  பண்ணியிருக்கேன்!”

""என்னடா சொல்றே?”

""அது வந்துங்க ஐயா... நாம இங்கேயிருந்து புறப்படும்போது, நம்ம தோட்டத்துலே  விளைஞ்ச உருளைக்கிழங்கையும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வந்தேன். நாம நீராடின போதெல்லாம் உருளைக் கிழங்குகளையும் புண்ணிய தீர்த்தத்துலே குளிப்பாட்டினேன்.  அந்தப் புண்ணிய உருளைக் கிழங்கைத்தான் இப்ப உங்களுக்குச் சமைச்சுப் போட்டேன்!”

""என்னடா இப்படி பண்ணிட்டே?”

""புண்ணிய நதிகளிலே குளிச்சா, புனிதமாகலாம்னு சொன்னீங்களே முதலாளி?!”

முதலாளி யோசிக்க ஆரம்பித்தார். புழக்கடையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கும்  புண்ணிய நதிகளில் குளிப்பதற்கும் வித்தியாசம் உண்டு!

ஆன்மிகம் சொல்லுகிறது.

வெளியே சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது; உள்ளேயும் சுத்தமாக
இருக்கவேண்டும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar