Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காட்சிப்பிழை
 
பக்தி கதைகள்
காட்சிப்பிழை

வீட்டில் தனியாக இருந்த போது பச்சைப்புடவைக்காரி உருவெளிப்பாடாகத் தோன்றி பாடம் நடத்தினாள்.
‘‘அங்கே தெரியும் காட்சியைப் பார்’’
மதுரையின் வடபகுதியில் இருந்தது அந்தப் பூங்கா. அதிகாலை நேரம். ஐம்பது வயதுள்ள ஒருவர் பூங்காவில் நடைப்பயிற்சி செய்தார். அவர் சற்று இருட்டான பகுதிக்குள் நுழைந்த போது, புதரிலிருந்து வெளியே வந்த ஒருவன், அவரை அமுக்கிப் பிடித்தான். அலைபேசியைத் தட்டிப் பறித்து விட்டு, அவரது கைகளைப் பின்னால் கட்டி முறுக்கி தள்ளியபடி பூங்காவின் வாசலுக்குப் போனான். கார் ஒன்று வந்ததும் அவரை ஏற்றினான். கார் சீறிக் கொண்டு கிளம்பியது.
‘‘என்ன அக்கிரமம் தாயே! அந்தத் திருடனைச் சுட்டுக் கொல்ல...’’
‘‘தொலைத்து விடுவேன். அவன் என் மனதிற்கினிய மகன்.’’
‘‘யார்... அந்த திருடனா?’’
‘‘ஆமாம். இதற்கு முன் என்ன நடந்தது என்று பார்த்தால் உனக்கு புரியும்.
சின்னையா ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளி. அரசியலில் ஆர்வம் கொண்டவன். அரசியல் கட்சி ஒன்றின் மாவட்டச் செயலாளர் தான் அவனது அபிமானத் தலைவர்..
சின்னையாவின் சம்பாத்தியம் குறைவு தான் என்றாலும் சிக்கனமாக வாழ்ந்தான். தீயபழக்கம் ஏதும் கிடையாது. எதிர்காலம் கருதி சேமிக்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்தது. காரணம் அவனது ஒரே மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டுமே!
சேமிப்பு லட்ச ரூபாயானதும், இவ்வளவு பணத்தை தன் சிறிய வீட்டில் பாதுகாக்க முடியாது என எண்ணி தன் அபிமானத் தலைவரிடம் கொடுத்து வைத்தான்.
ஒரு மாதத்திற்குள் மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பேசி முடித்தான்.
வெற்றிலை பாக்கு, தேங்காய், இனிப்புடன் தலைவரைப் பார்க்க ஓடினான். ஒரு தட்டில் அவற்றை வைத்து வணங்கினான். மகளின் கல்யாண செய்தியை தெரிவித்தான்.
‘‘தலைவரே நான் கொடுத்த லட்ச ரூபாயக் கொடுத்தீங்கன்னா... கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம்’’
‘‘எந்த ரூபா?’’
‘‘தலைவரே, அப்படி சொல்லாதீங்க! போன மாசம் கொடுத்தேனே? கஷ்டப்பட்டு சேர்த்த பணம் தலைவா. அது இல்லைன்னா என் மக கல்யாணம் நடக்காது. குடும்பத்தோட தற்கொலை பண்ண வேண்டியது தான்.’’
‘‘ யார் கிட்ட பணம் வாங்கினாலும் ஸ்டாம்பு ஒட்டி ரசீது கொடுப்பேன். ரசீதைக் காமிச்சுட்டு வாங்கிட்டுப் போ.’’
 ‘ரசீதெல்லாம் தந்தா... நானும் மாட்டிக்குவேன்; நீயும் மாட்டிக்குவ. நம்பிக்கை தாண்டா எல்லாம்’ என வசனம் பேசி பணத்தை வாங்கியவரா இப்படிப் பேசுகிறார்? என வருந்திய சின்னையாவை தள்ளி விட்டுத் தலைவர் காரில் கிளம்பிப் போனார்.
சின்னையாவின் மனம் பதறியது.  
போலீசுக்கு எப்படி போவது? பணத்திற்கு ஆதாரம் இல்லை என்றாலும் குருட்டு நம்பிக்கையுடன் காவல் நிலையம் சென்றான் சின்னையா.
அதிகாரியின் காலில் விழுந்து கதறினான். விபரத்தைக் கூறினான்.
‘‘.அந்தாளுகிட்ட பணம் கொடுத்தியா இல்லையான்னு சந்தேகமா இருக்குய்யா.’’
‘‘நான் கும்பிடற பச்சைப்புடவைக்காரி மீது சத்தியம்.. என் ஒரே பொண்ணு மீது சத்தியம். தலைவர்கிட்ட பணம் கொடுத்தேன்’’
பச்சைப்புடவைக்காரி என்றதுமே அதிகாரியின் மனம் நெகிழ்ந்தது. சட்டைப்பையில் இருந்த மீனாட்சி படத்தைத் தொட்டுப் பார்த்தார். அவளும் உத்தரவு கொடுத்தாள்.
‘‘பணம் வரலைன்னா விஷம் குடிச்சிச் சாக வேண்டியது தான் சாமி..”
அடுத்த இரண்டு நாளாக தலைவரை நிழல் போல் தொடர்ந்தார் அதிகாரி.
மூன்றாம் நாள் அதிகாலையில் தலைவர் நடைப்பயிற்சிக்கு வரும் முன்பாக, அந்த அதிகாரி மாற்றுடையில் வந்து புதருக்குள்  மறைந்து நின்றார். நேரம் பார்த்து அவர் மீது பாய்ந்து மொபைல் போனைப் பறித்தார். அப்படியே அள்ளிக்கொண்டு பூங்காவின் வாசலுக்கு வந்தார். விசில் அடித்ததும் ஏட்டையா காரை கொண்டு வந்தார். தலைவருடன் கார் அங்கிருந்து பறந்தது.
தலைவரை லாக்கப்பில் அடைத்து விட்டு காத்திருந்தார் அதிகாரி. நேரம் ஆக ஆக தலைவருக்கு பயம் உண்டானது. ஒரு மணி நேரமானதும் அதிகாரி, ‘‘நீங்க வெளியே வர்றதுக்கு வழி சொல்லித் தர்றேன். வீட்டுக்குப் போன் பண்ணுங்க. சின்னையா கொடுத்த பணம் ஒரு லட்சத்தைக் கொண்டு வரச் சொல்லுங்க. பணம் வந்ததும் நீங்க போயிரலாம். எந்தக் கேசும் எழுத மாட்டேன். முடியாதுன்னு அடம் பிடிச்சா ஒரு டஜன் செகஷன்ல கேஸ் புக் பண்ணி உள்ள தள்ளுவேன். உங்க பேர நாறடிப்பேன்.  கேஸ்லருந்து நீங்க தப்பிக்கலாம்.  தண்ணியில்லாக் காட்டுக்கு என்னையும் மாத்தலாம். ஆனா நாறின பேரு நாறினது தான்’’
‘‘செய்யறேன்’’
‘‘உங்க வீட்டு நம்பரச் சொல்லுங்க. போன் பண்ணித் தர்றேன்’’
பத்தாவது நிமிடம் தலைவரின் மனைவி பணத்துடன் வந்தாள்.  தலைவர் விடுதலையானார். இன்ஸ்பெக்டர் சின்னையாவிற்குச் சொல்லியனுப்பினார்.
அவனிடம் பணத்தை ஒப்படைத்தார் அதிகாரி..
அதை  அதிகாரியின் காலடியில் வைத்து அவன் வணங்கினான்.
‘‘ஐயா! இதில இருந்து உங்களுக்குப் பணம் கொடுத்தா தப்பாயிடும். நீங்க எனக்குத் குலதெய்வம்யா.  காணிக்கையா இந்த  பணத்தையும் உங்க காலடியில வச்சிடறேங்க. நீங்களா பார்த்து ஏதாவது கொடுத்தா என் பொண்ணு கல்யாணத்த  நடத்துவேங்க.’’
அதை எடுத்துச் சின்னையாவிடம்  திணித்தார் இன்ஸ்பெக்டர்.
‘‘போய் பொண்ணு கல்யாணத்த நடத்து.. மீதியை அப்பறம் பாத்துக்கலாம்...போ.’’
‘‘இதில் என்ன பாடம் கற்றுகொண்டாய்?’’
‘‘கண்கள் காண்பது உண்மையா அல்லது காட்சிப்பிழையா என தெரியும் வரை யாரையும் பழிக்கக் கூடாது.’’
‘‘சபாஷ். அதை ஏனப்பா அழுதபடி சொல்கிறாய்?’’
‘‘அதை விட முக்கிய பாடம் ஒன்றைக் கற்றேன் தாயே! அது தான்  அழ வைத்துவிட்டது.’’
‘‘என்ன பாடம்?’’
‘‘பணம் கிடைத்தவுடன் அதை அதிகாரியிடம் காணிக்கையாகக் கொடுக்கிறானே சின்னையா’’
‘‘அவன் நன்றியுணர்வு மிக்கவன்.’’
‘‘ஆனால் மனிதர்களாகிய நாங்கள் நன்றி கெட்டவர்கள். தாயே! நீங்கள் எங்களுக்கு என்ன தரவில்லை, சொல்லுங்கள். உடல், உள்ளம், உணவு, உறைவிடம், இந்த உலகம் என எவ்வளவோ தந்தீர்கள். காலமெல்லாம் உங்கள் காலடியில் விழுந்து கதறாமல் எனக்குப் பதவி கொடு, வீட்டைக் கொடு, காரைக் கொடு என உங்களை நச்சரிக்கும் நாங்கள் கேடு கெட்டவர்கள்  பணம் கொடுத்தவனை வஞ்சித்த அந்த அரசியல் தலைவனை விட நாங்கள் மோசமானவர்கள் தாயே!’’
‘‘உனக்கு என்னப்பா வேண்டும்?’’
‘‘என்னிடம் உள்ள அனைத்தையும் உங்கள் திருவடியில் ஒப்படைத்து விட்டு, என்றென்றும் உங்களுக்கு கொத்தடிமையாக வாழும் மனதை மட்டும் யாசிக்கிறேன்.”
அன்னை சிரித்தபடி மறைந்தாள்.
................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar