|
மடாலயத் தலைவர் ஒருவர், அங்கிருந்து மாற்றலாகி வெளியூரில் உள்ள வேறொரு மடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, அவர் தன் சீடர்களுள் ஒருவரை இந்த மடத்தின் தலைவராக்க நினைத்தார். எனவே அவர், ""இன்று முதல் உங்கள் செய் கைகளைக் கண்காணித்து, தகுந்த ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்!” என்று சீடர்களிடம் அறிவித்தார்.
அந்த நிமிடம் முதல் எல்லா சீடர்களும் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்தனர். சில நாட்கள் கழித்து, ""இவனே அடுத்த தலைவன்” என்று ஒருவனை அறிவித்தார் குரு. சீடர்களுக்கு அதிர்ச்சி, அவர்கள், ""நாங்கள் எல்லோரும் ஒழுங்காகத்தான் நடந்து கொண்டோம். அப்படி இருக்க இவன் மட்டும் என்ன உசத்தி?” என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
உடனே, ""நான் அறிவிப்பு செய்யும் முன்பே, அதே ஒழுக்கத்துடன் நடந்து கொண்டவன் இவன் மட்டுமே!” என்று பதிலளித்தார் குரு. |
|
|
|