|
சீடர்களுடன் புத்தர் ஒரு ஊருக்குள் நுழைந்தார். “இன்று மாலை புத்தரின் உபதேசம் நடக்க உள்ளது. அனைவரும் வாருங்கள்” என ஊராரிடம் தெரிவித்தனர் சீடர்கள். ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள் என பலரும் கூடினர். “உத்தமரே! தங்களின் உபதேசம் கேட்டால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? எத்தனையோ கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை பலன் ஒன்றுமில்லை. உடனடி பலன் தரும் மந்திரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்’’ என்றனர். ‘இந்த நிலையும் மாறி விடும்’ என சத்தமாகச் சொல்லி விட்டு நடந்தார் புத்தர். அனைவரும் திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லித் தொடங்கினர். ‘‘இந்த நிலையும் மாறி விடும். நிச்சயம் ஒருநாள் பூரண குணம் பெறுவோம்” என மகிழ்ந்தனர் நோயாளிகள். அழகு, பணத்தால் கர்வம் கொண்டவர்கள், “இந்த இளமையும், அழகும் ஒருநாள் மாறி விடும். அதனால் யாரையும் தாழ்வாகக் கருதக் கூடாது” என மனம் திருந்தினர். உழைக்காமல் பணம் சேர்த்தவர்கள்,‘‘ செல்வம் ஒருநாள் நம்மை விட்டு விலகும். அதற்குள் நாலு பேருக்கு உதவ வேண்டும்” எனத் தீர்மானித்தனர். இப்படி நிகழப் போகும் மாற்றம் குறித்து சிந்தித்தால் அவர்களின் வாழ்வில் நிம்மதி உண்டானது. ‘இந்த நிலை மாறி விடும்” என்பது நமக்கும் தேவை தானே!.............
|
|
|
|