|
செல்வந்தர் ஒருவர் துறவியை சந்தித்தார். அவரிடம், “துறவியாரே! மக்களுக்காக நான் தங்கும் சத்திரங்கள் கட்டியுள்ளேன். கோயில்களை ஏராளமாகப் புதுப்பித்திருக்கிறேன். ஆன்மிக நுால்கள் வெளிவர பொருளுதவி செய்துள்ளேன். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறேன்,” என பட்டியலை நீட்டிக் கொண்டே போனார். துறவி “ஓகோ! அப்படியா!” என தலையை அசைத்து விட்டு அமைதியாக நின்றார். செல்வந்தருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. தனக்கு அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என நினைத்து ஏமாந்து போனார். “துறவியே! நான் இவ்வளவு சேவை செய்துள்ளேனே! எனக்கு சொர்க்கம் நிச்சயம் தானே!” என்றார். “இல்லை” என்றார் துறவி. அதிர்ச்சியுடன் ‘ஏன்?’ எனக் கேட்டார் செல்வந்தர். ‘‘சேவையில் ஈடுபட்டாலும் அதை ‘நான்’ தான் செய்தேன் என்ற ஆணவத்துடன் இருக்கிறாய். ஆணவம் ஒரு நஞ்சு. அது உனக்கு கிடைக்கும் புண்ணியத்தில் கலந்து விட்டது. எனவே உன்னைத் திருத்திக் கொண்டால் தான் சொர்க்கம் கிடைக்கும்” என்றார். சேவையில் ஈடுபடுவோருக்கு தற்பெருமை எண்ணம் கூடாது என்பதை செல்வந்தர் உணர்ந்தார்..
|
|
|
|