|
குருேக்ஷத்திரப் போரில் கர்ணனின் இறுதிக் காலம் நெருங்கியது. அப்போது குந்தி தேவிக்கு அசரீரியின் மூலம் கர்ணனை பற்றிய தகவல் கிடைத்தது. அவள் போர்க்களத்துக்கு ஓடி வந்தாள். கர்ணனைத் தன் மடியில் வைத்தபடி, ‘‘மகனே! நீயே என் மூத்த மகன். பாண்டவர்களாகிய ஐந்து தம்பிகள் உனக்கு இருக்கிறார்கள். நான் உண்மையைச் சொல்லியிருந்தால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மழை தரும் மேகம் போல தர்மம் செய்தவனே! விதிவசத்தால் உன் உயிர் பிரியப் போகிறது. என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லை’’ எனக் கதறினாள். அப்போது குந்தியின் மார்பில் பால் சுரந்தது. குழந்தையாக இருந்த போது ஊட்டாத தாய்ப்பாலை அப்போது அவள் புகட்டினாள். இறப்பிலும் பசும்பால் ஊற்றுவது இன்றைக்கும் சம்பிரதாயமாக உள்ளது. ஆனால் உலகத்திலேயே தாய்ப்பால் குடித்து மரணத்தைச் சந்தித்த ஒரே ஜீவன் கர்ணன் மட்டுமே! எல்லாம் தர்மத்துக்கு கிடைத்த பலன்! கர்ணனைப் போல வாரி வழங்காவிட்டாலும், தர்ம சிந்தனையுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதே கர்ணனின் வாழ்வு நமக்கு சொல்லும் சேதி.
|
|
|
|