Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாய்மையைப் போற்று விபீஷணா!
 
பக்தி கதைகள்
தாய்மையைப் போற்று விபீஷணா!

இலங்கைக்கு அரசனான விபீஷணன், இலங்கைக்குள் ராமன் வருகை தருமாறு கேட்க விரும்பினான். ஆனால் ஒரு சந்தேகமும் அவனுக்குள் எழுந்தது.  தன்னையும், தன் மனைவியையும் பிரித்த ராவணனின் நாட்டுக்குள் நுழைய அவனது கால்கள் கூசுமே என யோசித்தான். இருந்தாலும் தன்னை மன்னனாக ஆக்கிய ஆற்றல் மிக்க தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். தயக்கமுடன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
உடனே வர சம்மதித்தான் ராமன். ‘‘எனக்கும் உன் நாட்டைப் பார்க்க விருப்பம் தான் விபீஷணா. அனுமன், அங்கதன், லட்சுமணன் ஆகியோர் உன் நாட்டின் வனப்பையும், எழிலையும் வர்ணித்தபோது எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் இலங்கையின் மன்னனான நீ அழைக்காமல் வருவது முறையாகுமா?’’ என்றான் ராமன்.
விபீஷணன் நெகிழ்ந்து போனான்.
 ‘என்ன ஒரு பெருந்தன்மை!’ என வியந்தான். உடனே ராமனுக்கு வழிகாட்டியபடி முன்னே சென்றான். ராமனுடன் மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.
இலங்கையின் அவலம் நிலை கண்டு வருந்தினான் ராமன். தன்னால்தானே இப்படி நேர்ந்தது என கவலை கொண்டான்.  பிரமாண்டமான மாளிகைகள் பொலிவு குறைந்து காணப்பட்டன. நந்த வனங்களில் மரங்கள் செழிப்பாக இருந்தன என்றாலும், அவை வேதனையை வெளிப்படுத்தி சங்கடப்படுத்தின. ஆள் அரவம் இல்லாத அரண்மனைகள் வருத்தப்பட வைத்தன. ‘சகோதரர்கள், படை வீரர்களை இழந்து விட்டானே’ என பெருமூச்சு விட்டான்.  
சற்றுத் தொலைவில் யாரோ ஒரு பெண் ஓடி ஒளிவதைக் கண்டான் ராமன். இதுவரை அந்தப் பகுதிக்குள் தம்மைக் கண்ட சிலர் தம்மை வணங்குவதை கவனித்த ராமன், இப்படி ஒருவர் மறைய முயற்சிப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
அருகில் வந்த விபீஷணன், ‘‘ராமபிரானே... இப்போது ஓடியது எங்கள் தாயார் நிக்ஷா தேவி,’’ என்றான்.  
 ‘‘அவர்கள் ஏன்  பயந்தோட வேண்டும்? நான் அந்த அளவுக்கு இந்தப் போரில் உயிர்ச்சேதம் புரிந்துவிட்டேனா…?’’ என்று குரல் தழுதழுத்தான்.
இதற்குள் விபீஷணனைச் சேர்ந்தவ சிலர், நிக்ஷாவை  அழைத்து வந்து ராமன் முன் நிறுத்தினர்.  
‘‘அம்மா! மன்னியுங்கள். போர் தர்மப்படி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், உடல்குறை உள்ளவர்களை  நான் துன்புறுத்த மாட்டேன். நிராயுதபாணியாக நின்ற ராவணனைத் தாக்குவதும் தர்மம் அல்ல என்று உணர்ந்து நாளை போரிட வருமாறு வாய்ப்பு கொடுத்தேன். அப்படிப்பட்ட நான் உங்களுக்குத் துன்பம் தரமாட்டேன், என்னை நம்புங்கள்…’’ என்றான் ராமன்.
‘‘ராமா... உன் பகைவனான ராவணனின் தாயார் என்ற குற்ற உணர்வால்தான் சந்திக்க முடியாமல் மறைந்து கொள்ள முயற்சித்தேன் என்பது ஒரு காரணம். ஆனால் இன்னொரு காரணமும் இருக்கிறது’’
ராமன், விபீஷணன் மற்றும் அனைவருக்கும் அவள் பதில் திகைப்பைத் தந்தது. ‘‘என்ன காரணம் என்று சொல்லுங்கள் அம்மா?  நிறைவேற்றி வைக்கிறேன்,’’ என ராமன் அவளின் கைகளைப் பற்றினான்.
‘‘ராமா, உன் வீரதீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்ணாகப் பிறந்ததாலும், அரண்மனையிலிருந்து வெளியே வரமுடியாத பாரம்பரியம், கட்டுப்பாட்டாலும் உன் மகிமையை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனாலும் உன் வீரச்செயல்கள் என் காதுகளை எட்டத்தான் செய்தன. அதேசமயம் உனக்கு என் மகன் ராவணன் துன்பம் இழைத்ததையும் நன்கறிவேன்.  ஆணவம் மிகுந்த அவனைப் பெற்றதற்காக அவமானப்படுகிறேன். இது ஒரு ஈ இருந்தாலும், நான் உன்னுடைய அடுத்தடுத்த வீரதீர பராக்கிரமங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், கேடடாவது இன்புற வேண்டும் என்பதற்காக நான் நீடித்து வாழ விரும்பினேன். அதற்காகவே ஒளிந்து கொள்ள ஓடினேன். உன் போர் தர்மத்தைப் புரிந்துகொள்ளாத உன் படையினர் யாராவது என்னைக் கொன்றுவிடக் கூடாது அல்லவா?’’
ராமன் அவளுடைய கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றி விட்டு, ‘‘அம்மா, விதி நிர்ணயித்த காலம்வரை நீங்கள் நிம்மதியாக வாழலாம். கவலை வேண்டாம்’’ என ஆறுதல் கூறினான்.
அனைவருக்கும் கண்களில் நீர் பெருகியது. ‘‘விபீஷணா, இவர் ராவணனுக்கு மட்டுமல்ல, உனக்கும் தாயார், அல்லவா? நீ ராவணனுக்கு அறிவுரை சொன்னபோது கேட்காத அவன், ஒருவேளை தாயார் சொல்லியிருந்தால் கேட்டிருப்பான் என நினைக்கலாம்.இவரை இனி் தான் மிகுந்த பரிவு, அக்கறையுடன் பாதுகாத்து வர வேண்டும், தாய்மையைப் போற்ற வேண்டும்…’’ என்றான்.
காலில் விழுந்தான் விபீஷணன். ‘‘சொந்தத் தாயல்ல, மாற்றாந்தாய் சொன்னார் என்பதற்காக காட்டுக்குப் புறப்பட்ட பண்பாளன் நீ. தாய்க்கு உரிய மரியாதையையும், மதிப்பையும் அளிக்கத் தயங்காத அற்புத மகன் நீ. உன்னுடன் இணைந்திருக்கும் நான், அந்த நற்பண்பை இழப்பனோ? ராவணனை எங்கள் தாயார் திருத்தவில்லையே என நான் இதுவரை ஆதங்கப்பட்டதில்லை. ஏனெனில் எனக்கு ராவணனின் முரட்டு குணம் தெரியும், என் தாயின் அன்புள்ளமும் தெரியும். அதனால் ராமா, நீ என் தாயாரைப் பற்றிய கவலை வேண்டாம். நான் அவரை கண்ணின் இமைபோலக் காப்பேன்.’’ என்றான்.
ராமனும் அவனைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar