Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நம்ம முதலாளி நல்ல முதலாளி
 
பக்தி கதைகள்
நம்ம முதலாளி நல்ல முதலாளி

சோணாட்டை ஆண்ட வீரசேனன் நிர்வாக முடிவுளை எல்லாம் தன் வசமே வைத்திருந்தார். அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை யாருக்கும் சுதந்திரம் இல்லை. மன்னரிடம் ஆலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டியிருந்தது.  பிரச்னை பற்றியே எப்போதும் சிந்தித்ததால் மனச்சோர்வுக்கு ஆளானார் மன்னர். ஒருநாள் அமைச்சருடன் நகர்வலம் சென்ற போது துறவி ஒருவரைச் சந்தித்தார்.
‘‘மன்னா! இந்த துறவியிடம் ஆலோசித்தால் தங்களின் மனச்சோர்வு தீரும்’’  என்றார் அமைச்சர்.
துறவியை வணங்கிய மன்னர், ‘‘சுவாமி... பிரச்னைகளை சிந்தித்தே என் காலம் கழிகிறது. இதனால் வெறுப்புக்கு ஆளாகி விட்டேன்’ என்றார்.
அதற்கு துறவி,‘‘அரசை நிர்வாகிப்பது கஷ்டமாக இருந்தால் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைப்பதே சிறந்தது” என்றார்.
“சுவாமி...என் மகன் சிறுவனாக இருக்கிறான். இன்னும் இளவரசு பட்டம் கட்டவில்லையே’’ என்றார் மன்னர்.
“அப்படியா” என்று சிரித்த துறவி,“என்னை நம்புங்கள். இப்போதே பிரச்னை மறைந்து விடும். அதற்கு முன் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்?’’ என்றார். மன்னரும் சம்மதித்தார்.
இந்த நாட்டையே தனக்கு தானம் அளிப்பதாக சத்தியம் செய்யச் சொன்னார் துறவி.
மன்னரும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
‘‘மகிழ்ச்சி... உன் பிரச்னை தீர்ந்தது’’ என்றார் துறவி.  
மன்னர் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்.
“நில்.....எங்கு செல்கிறாய்?” என தடுத்தார் துறவி.
“அரண்மனைக்குச் செல்லப் போகிறேன்” என்றார் மன்னர்.
“நாடு எனக்கு சொந்தமான பிறகு அரண்மனை என்னுடையது தானே? என் உத்தரவில்லாமல் அங்கு நீ செல்ல முடியாது” என்றார் துறவி.
“தாங்கள் சொல்வது உண்மையே. என் குடும்பத்துடன் வேறு நாட்டுக்குச் சென்று பிழைத்துக் கொள்கிறேன்” என்றான் மன்னன்.
“இவ்வளவு பெரிய நாட்டில் வாழ்வதற்கு வழியா இல்லை?  இங்கேயே இருக்கலாம்” என்றார் துறவி.
“தங்களின் கட்டளைப்படியே நடக்கிறேன் சுவாமி” என்றார் மன்னர்.
“நீயோ... மன்னராக இருந்து நாட்டை நிர்வகித்தவன். நானோ கடவுளே கதி என்று வாழ்பவன். இந்த நாட்டை சொந்தமாக்கி கொண்டு நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீயே கடவுளின் பிரதிநிதியாக இருந்து இந்த நாட்டை நிர்வாகம் செய். அதற்கான ஊதியத்தை பொக்கிஷத்தில் எடுத்துக் கொள். பிரச்னைகளை தலையில் துாக்கிக் கொண்டு அலைந்தால் விரக்தி தான் மிஞ்சும். ‘நம்மை நல்வழியில் நடத்த கடவுள் என்னும் முதலாளி இருக்கிறார். நான் அவரின் பிரதிநிதி’ என்ற சிந்தனையுடன் செயல்படு. மனச் சோர்வு வராது” என்றார் துறவி. நிம்மதியுடன் அரண்மனைக்குப் புறப்பட்டார் மன்னர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar