|
மன்னரைக் காண ராஜகுரு ஒருமுறை வந்திருந்தார். அவரை உபசரிக்க விரும்பிய மன்னர் ஒருவாரம் அரண்மனையிலேயே தங்கும்படி வேண்டினார். ‘‘சரி...இந்த சத்திரத்தில் தங்கிச் செல்கிறேன். மகிழ்ச்சி தானே!’’ என்றார் குரு. அதிர்ச்சியுடன்,”குருவே! இது என் அரண்மனையாச்சே. சத்திரம் என்கிறீர்களே?” எனக் கேட்டார் மன்னர். ‘‘மன்னா! உனக்கு முன்பு இந்த அரண்மனையில் யார் வாழ்ந்தார்கள்?” எனக் கேட்க, தன் தந்தையார் என்று மன்னர் பதிலளித்தார். ‘‘மன்னா! அவருக்கு முன்பு இருந்தவர்.’’ எனக் கேட்டதும் தன் தாத்தா இருந்ததாகத் தெரிவித்தார் மன்னர். ‘‘உன் தந்தை, தாத்தா எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டார். ‘‘ காலம் முடிந்ததால் மண்ணுலகத்தில் இருந்து மேலோகம் சென்று விட்டனர்’’ என்றார். ‘‘சரி உனக்குப் பிறகு அரண்மனையில் யார் இருப்பார்கள்?’’ எனக் கேட்டார் குரு. ‘‘என் மகன் இருப்பான். அதன் பின் பேரன்’’ என்றார் மன்னர். ‘‘ஆக.. இந்த அரண்மனை யாருக்கும் சொந்தமில்லை அல்லவா! உன் பாட்டனார் சில காலம் இருந்தார். பிறகு உன் தந்தையார், இப்போது நீ, உனக்குப் பின் மகன் சிலகாலம் இருப்பான். அதன்பின் பேரனுக்கு இது சொந்தமாகி விடும். யாரும் நிரந்தரமாக இங்கு தங்க முடியாது. யாராக இருந்தாலும் சில காலம் மட்டுமே. இந்த அரண்மனை மட்டுமல்ல...உலகமே சத்திரம். சிலகாலம் மட்டுமே இங்கு தங்க முடியும்’’ என விளக்கம் அளித்தார் குரு.
|
|
|
|