|
ராவணனுடன் போர் புரிவதற்காக கடலில் பாலம் கட்டும் பணி நடந்தது. அதைக் காண வந்த ராமரிடம், கரடிகளின் தலைவனான ஜாம்பவான், ‘‘பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால் படையினர் ஒவ்வொருவராகவே செல்ல முடியும்,’’ என்றார். ‘‘அப்படியா! பார்க்கலாம்’’ என சொல்லி பாலத்தில் ராமர் நடந்தார். அவரது பாதம் பட்டதும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று நெருங்கியபடி நின்று ராம தரிசனம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தன. இதனால் பாலம் அகலமானது போல தோன்றியது. ‘‘ஜாம்பவான்... இந்த கடல்வாழ் உயிர்கள் மீது நடக்க முடியுமா?’’ எனக் கேட்டார் ராமர். சிரித்தபடியே, ‘‘அதெப்படி சாத்தியம் ராமா! இவற்றின் மீது கால் வைத்தால் பாரம் தாங்காமல் மூழ்குமே! கடலுக்குள் அல்லவா விழ நேரிடும்!’’ என்றார் ஜாம்பவான் . ‘‘ படைகளை நடக்கச் சொல்லுங்கள்’’ என சொன்னார் ராமர். ராமநாமம் ஜபித்தபடி நம்பிக்கையுடன் நடந்தனர். ராமசேவைக்கு பயன்படுகிறோம் எனக் கருதிய கடல்வாழ் உயிர்களும் தங்களுக்கு ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்டன.
|
|
|
|