|
கிருஷ்ணரின் மகனான சாம்பனுக்கும், அவனது யாதவ நண்பர்களுக்கும் பிறரை கேலி செய்வதில் அலாதி ஈடுபாடு. ஒருமுறை துவாரகையில் இருந்து பிண்டாரகம் என்னும் கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றான் சாம்பன். வயிற்றில் துணிகளை வைத்துக் கட்டி கர்ப்பிணி போல சாம்பனுக்கு வேடமிட்டு விளையாடினர். விஸ்வாமித்திரர், கண்வர் என முனிவர்கள் பலர் அப்பகுதியில் தவமிருப்பதைக் கண்டனர். அவர்களிடம் ‘‘ முனிவர்களே! இந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என சொல்லுங்களேன்?’’ என்றனர். ‘ஆண் அல்லது பெண் குழந்தை என பதில் சொல்வர். உடனே வயிற்றிலுள்ள துணிகளை அவிழ்த்துக் காட்டி கேலி செய்ய வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் முனிவர்கள்,’’ அட அசடுகளா! இவன் கிருஷ்ணனின் மகன் சாம்பன் தானே! முனிவர்களை கேலி செய்த உங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும். இவனது வயிற்றில் உலக்கை பிறந்து உங்களின் வம்சத்தையே அழிக்கும்’’ என சபித்தனர். அது போல உலக்கை ஒன்று சாம்பனின் வயிற்றில் உண்டானது. அதை பொடியாக்கி கடலில் கலந்தனர். கரைத்த துகளில் இருந்து புற்கள் முளைத்தன. அந்த புற்களே உலக்கைகளாக மாறி யாதவ வம்சத்தை அழித்தது. பிறரைக் கேலி செய்வது பெரும் பாவம்.
|
|
|
|