|
பணக்காரர் ஒருவருக்கும், படிப்பாளி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘‘ வாழ்க்கைக்கு பணம் தான் ஆதாரம். பக்தன் கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்ல முடியுமா? பணம் இல்லாமல் அர்ச்சனை எப்படி செய்வது? பொழுது போக்க சினிமாவுக்குச் சென்றாலும் பணம் இல்லாவிட்டால் எப்படி?. பணம் இல்லாதவன் பிணத்திற்குச் சமம்’’ என்றார் பணக்காரர். இதைக் கேட்ட படிப்பாளி, ‘‘மனிதனுக்கு அறிவு இல்லாமல் பணம் எவ்வளவு இருந்தும் பயன் இருக்காது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறார் அவ்வைப்பாட்டி’’ என்று பதிலடி கொடுத்தார். இருவரும் தீர்வு கேட்டு ஞானி ஒருவரை சந்தித்தனர். ‘‘கண்களில் சிறந்தது வலக்கண்ணா? இடக்கண்ணா? என்று கேட்டால் சரியாகுமா? அது போலத் தான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுகிறீர்கள். வாழ்வுக்கு படிப்பு, பணம் அவசியமானவை. இரண்டையும் நல்ல குறிக்கோளுக்காக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் அழிவுபாதைக்கு செல்ல நேரிடும். இதில் ஒன்று இல்லாவிட்டாலும் நம் வாழ்வு முழுமை பெறாது’’ என்றார் ஞானி. ‘சபாஷ்... சரியான தீர்ப்பு’ என்று சொல்லி தங்களுக்குள் கைகொடுத்து மகிழ்ந்தனர்.
|
|
|
|