|
ஏழுமலையான் பக்தன் ஒருவன் மாட்டு வண்டியில் தானிய மூடைகளை ஏற்றிச் சென்றான். மழைக்காலம் என்பதால் வழியெங்கும் சேறாக இருந்தது. மாடுகளால் வண்டியை இழுக்க முடியவில்லை. ஓரிடத்தில் சக்கரம் சேற்றில் சிக்க வண்டி குடை சாய்ந்தது. வண்டியை நகர்த்த முயற்சிக்காமல், ‘‘ திருப்பதி ஏழுமலையானே! எனக்கு நல்வழி காட்டப்பா’’ என பிரார்த்தித்தான். கோவிந்த நாமத்தை பலமுறை சொல்லி அழைத்தான். வண்டி நகர்ந்தபாடில்லை. பொறுமை இழந்த அவன், தன்னைக் காப்பாற்ற வராத ஏழுமலையானைத் திட்டத் தொடங்கினான். ‘‘ வண்டியை சேற்றில் இருந்து இழுக்கும் வலிமை கைகளுக்கு இருந்தும், என் உதவியை எதிர்பார்க்கிறாயே. பக்தனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருப்பதோடு, விடாமுயற்சி, உழைப்பின் மீதும் ஈடுபாடு வேண்டும்.’’ என அசரீரி வானில் கேட்டது. பலம் கொண்ட மட்டும் தோள்களில் தாங்கி வண்டியை அவன் இழுக்க, சேறில் இருந்து வெளியேற ஆரம்பித்தது. விடாமுயற்சி இருந்தால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஏழுமலையானை வணங்கினான்.
|
|
|
|