Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சோதனை மேல் சோதனை
 
பக்தி கதைகள்
சோதனை மேல் சோதனை

“நெஞ்சு வலின்னு ஒரு ஆளு எங்க ஆஸ்பத்திரிக்கு வந்தாரு சார்.  சாதாரண வேலையில இருக்கறவரு. இன்சூரன்ஸ் கெடையாது. நான் இசிஜி, எக்கோ எல்லாம் பாத்துட்டு இதயத்துல பிரச்னை இல்லைன்னு சொல்லிட்டேன். இருந்தாலும் அந்தாளு எனக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. சீனியர் டாக்டர் வம்படியா ஆஞ்சியோ பண்ணிட்டாரு. ஒரு லட்சம் ரூபாய் பில் போட்டுட்டாங்க. அந்தாளுக்கு வலி அப்படியே இருக்கு. காசு இல்ல, சார். ஏன் இப்படிச் செஞ்சீங்கன்னு சீனியரைக் கேட்டேன்.  என்னக் கன்னா பின்னான்னு திட்டினாரு சார். வயசுல பெரியவர்னு நான் விட்டுட்டேன். நேத்திக்கு என்னை திருவள்ளூர் சென்டருக்கு மாத்திட்டாங்க.  என் வருமானம் பாதியாக் குறைஞ்சிருச்சி. பொண்டாட்டி, பிள்ளை, அப்பா, அம்மா, கல்யாணமாகாத தங்கை இவங்களை எல்லாம் விட்டுட்டுத் தனியா இருக்கணும். எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி நடக்கணும்? நான் நேர்மையா இருக்கிறது தப்பா? நோயாளிகிட்ட காசு பறிக்காம ஒழுங்கா வைத்தியம் பார்க்கிறது தப்பா? இல்ல தினமும் அந்தப் பச்சைப்புடவைக்கரியக் கும்பிடறது தப்பா?’’
புலம்பியவர் ஒரு இளம் இதயநோய் நிபுணர்.  ஏதோ ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினேன்.   
அன்று மாலை கோயிலுக்கு சென்றபோது அந்த மருத்துவரைச் சுற்றியே மனம் ஓடிக்கொண்டிருந்தது.
கோயில் மூடப்பட்டிருந்ததால் கம்பிக் கதவுக்களுக்கிடையே முகம் புதைத்து தரிசிக்க வேண்டியிருந்தது.
“வண்டியை இப்படியா நிறுத்திட்டுப் போவீங்க? அறிவு வேணாம்?”
என்னைப் பார்த்துத்தான் கத்தினாள் அந்தப் போலீஸ்காரி.
“மேடம், கொஞ்சம் நிதானமாப் பேசுங்க. அது என் வண்டி இல்ல.”
“இவரு அடுத்தவங்க வண்டிக்குப் பொறுப்பேற்க மாட்டாராம். ஆனா அடுத்தவங்க வாழ்க்கைக்கே பொறுப்பேத்துக்கிட்டு ‘ஏனம்மா அந்த மருத்துவரைப் படுத்துகிறீர்கள்?’ என என்னிடம் சண்டையிடுவாராம்!”
அன்னையின் காலில் விழுந்தேன்.
“கொத்தடிமையின் லட்சணம் எஜமானி என்ன செய்தாலும் அதை அப்படியே ஏற்பது தானே”
“இருந்தாலும் அவர் நல்லவர்’’
“கர்மக்கணக்கு உனக்கு வேண்டாம் என எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? “
அன்னையில் குரலில் கடுமை தெரிந்தது.
“தாயே! அவரை  உருத்தெரியாமல் அழித்தாலும் இனிமேல் உங்களிடம் இதைப் பற்றிப் பேசமாட்டேன்.”
“கோபத்தைப் பாரேன்! அவன் இன்னும் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்பது விதி. ஆனால் அவன் மனதில் அன்பு நிறைந்திருந்தால் ஒன்றும் ஆகாது.”
அன்னை மறைந்தாள்.
மூன்று நாள் கழித்து அதே மருத்துவரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
“ரத்தம் பாக்காம விடமாட்டா போலிருக்கே சார்?”
“யாரு?”
“வேற யாரு, உங்க பச்சைப்புடவைக்காரிதான். அவகிட்ட பிரச்னையைச் சொன்னா ஒண்ணு, தீ்ர்த்து வைக்கணும். இல்லைன்னா,  நீயே ஏதாவது செஞ்சிக்கப்பான்னு விடணும். அடுத்தடுத்து பிரச்னையக் கொடுத்தா என்ன செய்வேன் சார்? என் நம்பிக்கையே ஆட்டம் கண்டுச்சி.”
அப்படி என்னாச்சு?
“என் ஒரே தங்கைக்கு கொரோனா சார். நானே டாக்டரா இருந்தும் எந்தத் தனியார் ஆஸ்பத்திரிலயும் சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் கண்டவன் கால்ல விழுந்து அவளை திருவள்ளூருக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். எங்க ஆஸ்பத்திரிலதான் சேத்திருக்கேன். ஏற்கனவே பாதி வருமானம்தான் வருது. எத்தனை லட்சத்துக்கு பில் போடப் போறாங்களோ தெரியலையே! “
“பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கறேன்.”
“என் தங்கை பிழைக்கணும்னு வேண்டிக்காதீங்க. தன் கையில இருக்கற சூலாயுதத்தால என்னக் குத்திக் கொல்லணும்னு வேண்டிக்கங்க.”
அடுத்த இரண்டு வாரம் ஒன்றுமே நடக்கவில்லை. அந்த வெள்ளிக்கிழமை மதிய உணவைத் தவிர்த்தேன். மாலையில் மனம் போன போக்கில் நடந்தேன். பச்சைப்புடவைக்காரியிடம் பிரார்த்தனை செய்யவே பயமாக இருந்தது. அவள் படைத்த மனிதர்களை அவள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்ற மனநிலை ஏற்பட்டது. வயிறும், மனமும் காலியாக இருந்தது.
“சாமி அவிச்ச பனங்கிழங்கு சாப்பிடு. பசிக்கு நல்லது.”
எனக்குப் பசிக்கிறது என இவளுக்கு எப்படி தெரியும்?
“எனக்குத் தெரியாதது ஏதும் இல்லையப்பா.”
“அவரைக் காப்பாற்றுங்கள் என பிரார்த்தனை செய்யக் கூட உரிமையில்லாத கொத்தடிமை இருந்தால் என்ன, இல்லை, செத்தால்தான் என்ன... தாயே?”
“பனங்கிழங்கு சாப்பிட்டால் உனக்கு ஒரு காட்சியைக் காட்டுவேன்.”
அது பனங்கிழங்கு இல்லை. பச்சைப்புடவைக்காரியின் கைபட்ட அமுதம். பத்துக் கிழங்குகளைச் சாப்பிட்டேன். பசி அடங்கியது.   
“மனதில் அன்பு கூடினால் பிரச்னை பறந்தோடி விடும். அந்தக் காட்சியைப் பார்.”
அந்த மருத்துவர் பணிபுரியும் பெரிய மருத்துவமனையின் தலைவர் மருத்துவர்களிடம்  பேசிக் கொண்டிருந்தார்.
“சென்னையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு தொடங்கப் போகிறோம். பொது மருத்துவப் பிரிவின் தலைவர் தான் பொறுப்பை ஏற்க போகிறார். இதற்காக இவருக்கு அதிக ஊதியம்…”
ஆனால் அவரோ, ‘‘என்னை, மன்னிச்ருங்க. எனக்கு 62 வயசாகுது. இப்போதான் பேரன் பிறந்திருக்கான். எனக்கு ஏற்கனவே  ஹார்ட் வீக். அதனால...’’
“சரி. சீனியர் இதய சிகிச்சை நிபுணர்...’’
“என்னையும் மன்னிக்க வேண்டும். எனக்கு ஏற்கனவே நுரையீரல பிரச்னை. கொரோனா வந்தா எனக்கு கோர மரணம் தான்.”
இப்படியாக ஒவ்வொருவராக பொறுப்பைத் தட்டிக் கழித்தனர்.
என்னிடம் புலம்பிய இளம் மருத்துவர் எழுந்தார்.
“சார்... அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கறேன் சார். “
“இந்த சாக்குல திருவள்ளூர்ல இருந்து சென்னை வரலாம்னு பார்க்கறீங்களா?”
“சத்தியமா இல்ல, சார். கொரோனா டியூட்டி முடிஞ்சதும் திரும்பவும் திருவள்ளூருக்கே போயிடுவேன்’’
“பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பயந்து பின்வாங்கற வேலைய நீங்க ஏன் ஏத்துக்கிறீங்க? இதனால உங்க உயிருக்கே ஆபத்துன்னு தெரியும்ல?”
“கொஞ்ச நாளைக்கு முன்னால என் ஒரே தங்கைக்கு கொரோனா வந்துச்சு சார். நம்ம ஆஸ்பத்திரிலதான் வச்சிப் பாத்தோம். தங்களோட உயிருக்கு அபாயம்னு தெரிஞ்சிருந்தும் எத்தனையோ டாக்டர்களும் நர்ஸ்களும் என் தங்கைக்குச் சிகிச்சை கொடுத்தாங்க சார். என் தங்கை நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டா சார். என் தங்கையை  மீட்டுக் கொடுத்த  நல்ல உள்ளங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன் சார் இது.  என் தங்கையை காப்பாத்திக் கொடுத்த பச்சைப்புடவைக்காரிக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் சார்’’
எல்லோரும் சேர்ந்து கைதட்டினர்.  
“சபாஷ் டாக்டர். ரெண்டு மாசம் கொரோனா டியூட்டி பாருங்க. அதுக்கப்பறம் நீங்க இதய நோய்ப் பிரிவுக்குத் தலைவராகலாம். சென்னையிலதான் உங்களுக்கு வேலை. உங்க வருமானம் நாலு மடங்கு அதிகமாகும். அதுக்கு நான் உத்திரவாதம்.”
 குழப்பத்துடன் தன் சீனியர் மருத்துவரைப் பார்த்தார்.
“அவருக்கு வயசாயிருச்சி. பாவம், நுரையீரல்ல வேற பிரச்னைன்னு சொல்றாரு. அதனால் அவர் ரிட்டயராயிடுவாரு’’
அவரும் அசடு வழிந்தார்.
பனங்கிழங்கு கொடுத்த பராசக்தி தொடர்ந்து பேசினாள்.
“நான் உன் நண்பரைச் சோதிக்கவில்லையப்பா. அவர் மனதின் ஆழத்தில் இருந்த அன்பை வெளியே கொண்டுவரத்தான் இந்த நாடகம். பெரிய பதவி, நிறைய பணம், புகழ், வசதியான வாழ்க்கை எல்லாத்தையும் கொடுக்கப் போகிறேன். அதற்கு அவரைத் தயார்ப்படுத்தினேன்.”
வேரறுந்த மரம் போல பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன். எழுந்த போது அவள் அங்கில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar