Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மருமகளாக வரும் திருமகள்
 
பக்தி கதைகள்
மருமகளாக வரும் திருமகள்

வி.அரவிந்த் சுப்ரமண்யம்

ஐப்பசி அமாவாசையன்று மகாலட்சுமியை வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும். ஐப்பசி அமாவாசையன்று தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது!
கூர்ஜர தேசத்தில் (குஜராத், ராஜஸ்தான் மாநிலம்) தீபாவளி கதை ஒன்று மக்கள் மத்தியில் உள்ளது.
ராவல் பிருத்வி சிங் என்ற பண்ணையார்  இருந்தார். செருக்குடன் வாழ்ந்ததால் மகாலட்சுமி அவர் மீது கோபம் கொண்டாள். சூதாட்டத்தில் ஈடுபட்ட அவர் சொத்துக்களை இழந்தார்.
அவரது மனைவி ரோகிணி. புத்திசாலி. கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள். அந்நிய தேசத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக  குடியேறினர். தன் கணவர் நல்வாழ்வு பெற காலை, மாலையில் விளக்கேறி வழிபட்டாள்.
ஒருநாள் வீட்டிலுள்ள துளசியை வழிபடும் போது, பருந்து ஒன்று நாடாளும் அரசிக்கு சொந்தமான மாலையை விட்டுச் சென்றது. அவள் அதை பத்திரப்படுத்தினாள்.
 மாலை காணாமல் போனதால் மன்னர் வருந்தினார். பருந்து கொத்திச் சென்ற மாலையைக் கண்டுபிடித்து தருபவருக்கு பரிசளிப்பதாக அறிவித்தார். இதையறிந்த பிருத்வி மனைவியிடம் சொல்ல, ரோகிணி தன்னிடமிருந்த மாலையை எடுத்துக் காட்டினாள். மன்னரிடம் அவர்கள் ஒப்படைக்க ‘‘ நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்’’  என்றார் மன்னர்.
 ‘‘என் கோரிக்கையை நிறைவேற்றினால் போதும்’’ என்றாள் ரோகிணி.
‘‘என்ன வேண்டுமோ கேள்’’  என்றார் மன்னர்.
‘‘ தீபாவளி நன்னாளில் அரண்மனை உட்பட எங்கும் விளக்கு ஏற்றக் கூடாது. ஆனால் எங்கள் குடிசையில் மட்டும் ஏற்ற அனுமதிக்க வேண்டும். விளக்கு ஏற்ற யாராவது ஆசைப்பட்டால் அவர்கள் எங்கள் வீட்டைச் சுற்றி ஏற்ற அனுமதிக்கலாம்’’ என்றாள். அனைவரும் வாயடைத்து நின்றனர்.  மன்னரும் அதற்கு சம்மதித்தார்.
தீபாவளி வந்தது! மாலையில் ரோகிணியின் குடிசையைச் சுற்றி விளக்கேற்றப்பட்டது.  
 ஊருக்கு ஒதுக்குப்புறமான குடிசையில் மட்டும் விளக்குகள் எரிவதை கண்ட மகாலட்சுமி அங்கு வந்தாள்.  வாசலில் நின்ற ரோகிணியோ மகாலட்சுமியை தடுத்தாள்.  
‘‘ஐப்பசி அமாவாசையன்று விளக்கேற்றி இருக்கும் வீட்டிற்குள் நுழைவேன். இது என்னுடைய சத்தியவாக்கு. ஏன் தடுக்கிறாய்?’’ எனக் கேட்டாள் மகாலட்சுமி.
‘‘தாராளமாக வரலாம்... ஆனால் என் வீட்டுக்கு எப்படி வரப் போகிறாய்?’’ எனக் கேட்டாள் ரோகிணி.  
‘‘ உன் மகளாக வருகிறேன்’’  
‘‘மகளாக வந்தால் என்றாவது ஒருநாள் புகுந்த வீட்டிற்கு போய் விடுவாய். அதனால் என் மருமகளாக வா! அனுமதிக்கிறேன்’
எந்த வீட்டிலும் விளக்கு எரியாததாலும், விளக்கு ஏற்றிய வீட்டில் நுழைந்தாக வேண்டும் என்பதாலும் ரோகிணியின் நிர்பந்தத்தை ஏற்றாள் மகாலட்சுமி. சாதுர்யமாக பேசிய ரோகிணியிடம், ‘‘உன் மருமகளாகவே வருகிறேன். உன் வீட்டில் நிரந்தரமாக தங்குகிறேன்’’ என மகாலட்சுமி குடிசைக்குள் நுழைந்தாள்.
 ரோகிணி மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாள்.   
தீபாவளி நன்னாளில் பூஜையறை மட்டுமின்றி எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றி திருமகளை வரவேற்போம். எல்லா ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கட்டும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar