|
பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்களிடம் ஆசிரியர், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒப்பிடுங்கள், என்றார்.ஒரு மாணவன், ராமாயணத்தில் நான்கு சகோதரர்கள். மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்கள், என்றான். இன்னொருவன், ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு மனைவி. ஆனால், பாரதத்திலோ ஐந்து பேருக்கும் ஒரு மனைவி, என்றான்.மூன்றாமவன், ராமாயணத்தின் அட்டை கறுப்பு. மகாபாரதத்தின் அட்டை நீலம் என்றான். நான்காமவன், ஸ்ரீராமர் காட்டில் பதினான்கு வருடங்கள் வசித்தார். பாண்டவர்களின் வனவாசம் பதின்மூன்று வருடங்கள், என்றான். ஐந்தாவது மாணவன், ஐயா! பெண்ணாசையால் ராவணன் அழிந்தான். மண்ணாசையால் துரியோதனன் அழிந்தான், என்றான்.அனைவருடைய பதில்களையும் கேட்ட ஆசிரியர், ஐந்தாம் மாணவன் சொன்ன பதிலே பொருத்தமானது. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதையே ராமாயணமும், மகாபாரதமும் வலியுறுத்துகின்றன. ஆசையற்ற மனதிலே தான் ஆனந்தம் உண்டாகும், என்றார். கு.சிவஞானம்
|
|
|
|