|
செல்வந்தர் ஒருவர் செல்வ செழிப்புடன் வளமாக வாழ்ந்து வந்தார். அவரின் வாணிபக் கப்பல் ஒன்று ஏராளமான பொருள்களுடன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. செய்தியை கேள்விப்பட்ட செல்வந்தர் வருத்தம் கொள்ளாமல் வேலைக்காரனை அழைத்தார். நாளை மாலை நம் மாளிகையில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்..! அதைக் கேட்டவர்கள் எல்லோரும் திகைத்தார்கள். செல்வந்தர் தொடர்ந்தார், நீங்கள் எல்லோரும் கப்பல் மூழ்கியதால் நஷ்டம் வந்து விட்டதாக வருந்துகிறீர்கள். ஆனால் நான், பொருள் நிலையானது அல்ல என்பதை உணர்த்த இறைவன் நடத்திய பாடமாக நினைக்கிறேன். மீதமுள்ள செல்வமும் பறிபோவதற்கு முன், அதை வைத்து நிலையான புண்ணியத்தையாவது தேடிக்கொள்கிறேன் என்றார்.
|
|
|
|