Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனசை வைச்சுக்கோ கண்ணாடி போல!
 
பக்தி கதைகள்
மனசை வைச்சுக்கோ கண்ணாடி போல!


பக்கத்து வீ்ட்டு பாட்டி அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பாள். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திடுவாள். இதைக் கண்ட இளம்பெண் கமலாவுக்கு அவள் மீது குறுகுறுப்பு!
‘‘கண்ணாடியை உற்று உற்றுப் பார்க்கிறாளே! ஒருவேளை மாயஜாலக் கண்ணாடியோ?’ ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
பாட்டியை நெருங்கினாள்.
“பாட்டி…!”
“என்ன கமலா?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்க்கிறீர்கள்?”
புன்னகைத்த பாட்டி, “சாதாரண கண்ணாடி தான்.. ஆனால் அது சொல்லும் பாடங்கள் நிறைய!”
“பாடமா…கண்ணாடியிடம் என்ன பாடம் இருக்க முடியும்?”
“அப்படி கேள். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குக் கண்ணாடி போன்றவர்கள்”
“எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக் காட்ட வேண்டும், எப்படி சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை கண்ணாடி தெளிவுபடுத்துகிறது.”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"
“ஆமாம்”
“அதே போல உன் சகோதரியிடம், சினேகிதியிடம் எந்தளவுக்குக் குறை இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் சுட்டிக்காட்ட வேண்டும். துரும்பைத் துாணாகவோ, கடுகை மலையாகவோ சொல்வது கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
"அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன் நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் அது மவுனமாகி விடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை நேரடியாக சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசுவது கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாம் பாடம்!”
“அப்புறம்?”
“ஒருவருடைய முகத்திலுள்ள கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ கொள்கிறாரா?”
“இல்லையே... மாறாக அதைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் கோபமோ, எரிச்சலோ கொள்ளாமல்  நன்றி கூற வேண்டும். குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாம் பாடம்!”
“பாட்டி.. அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடியில் இத்தனை கருத்துகளா…அம்மம்மா! யோசித்தால் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்!” என்றாள்.
இனி கண்ணாடியில் முகம் பார்க்கும் போது இந்த அறிவுரைகளை மறக்காதீர்கள். அது போல மனசையும் தெளிவாக வைத்திருங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar