Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முருகனின் திருவிளையாடல்கள்
 
பக்தி கதைகள்
முருகனின் திருவிளையாடல்கள்

‘இளங்கன்று பயம் அறியாது’ என்பார்கள். வளர்ந்து வரும் பிள்ளைப் பருவதத்தில் திருமுருகன் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் பல பாடல்கள் மூலம் கச்சியப்பர் பாடியுள்ளார்.
ஆதி சிவனின் அருட்பெருஞ்ஜோதியில் உருவானதாலும், அம்பிகையின் அரவணைப்பில் ஆறு குழந்தைகளும் ஒன்றாக்கப்பட்டதாலும் முருகனின் பிறப்பே தேவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவனது விளையாட்டு மேலும் வியப்படைய வைத்தது.
சதங்கையும், தண்டையும், சிலம்பும் திருவடிகளிலே ஒலிக்க, இடுப்பிலே கிண்கிணி இசைக்க, செவிகளிலே குண்டலம் குலுங்க, ஆபரணம் மார்பிலே விளங்க மலைகளிலே ஏறியும், இறங்கியும், பொய்கையில் குளித்தும், களித்தும், பூந்தோட்டங்களிலே விழுந்தும், எழுந்தும், வீரதீர விளையாட்டுகள் புரிந்தது தெய்வீகக் குழந்தை!
‘மன்று தோறுலாவும் மலர் வாவி தோறுலாவும்
துன்று சிறு தென்றல் தவழ் சோலை தோறுலாவும்
என்றும் உலாவாதுலவும் யாறு தோறுலாவும்
குன்று தோறுலாவும் உறையும் குமரவேளே!
 இசைக்கருவிகளை இயக்குவதும் பாடல் பாடுவதும், பரதம் ஆடுவதும் முருகனின் பிள்ளை விளையாட்டுக்களாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தன.
கண்ண பெருமானைப் போல புல்லாங்குழல் ஊதி மனதைக் கொள்ளை கொள்பவன் என்பதை, ‘குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்’ என முருகனைப் போற்றுகிறது திருமுருகாற்றுப்படை.  
‘‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாக விளங்கும் மகாவிஷ்ணு, ஒருமுறை தன் வலம்புரிச் சங்கை ஊதினால் தேவலோகத்தின் கற்பகச் சோலையிலும், பொய்கையிலும் அதன் ஒலி எதிரொலிக்கும். ஆனால் முருகன் நடக்கும் போது அவனது இடுப்பில் கட்டிய கிண்கிணிகள் அசைந்து எழுப்பும் ஒலியோ பதினான்கு உலகமும் எதிரொலிக்கும் என்கிறது கந்தர் அலங்காரம்.
‘மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது! வேல் எடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருஅரையில்
கிண்கிணி ஓசை பாதினாலு உலகமும் கேட்டதுவே!’’
குழந்தை முருகனின் விளையாடல்களைக் கண்ட பார்வதி மகிழ்ந்தாள். ‘‘நாதனே! முருகனின் ஒவ்வொரு செயலும் மாயையில் அவன் உங்களுக்கு நிகரானவன் என்பதைக் காட்டுகிறது. புதல்வனின் குணாதிசயங்களை சொல்லுங்களேன்’’ எனக் கேட்டாள்.
‘ஆறுமுகனின் பெருமை அளவிடற்கரியது. அவன் வேறு நான் வேறு அல்ல. குழந்தை போலத் தெரிந்தாலும் தன்னை வழிபடும் அனைவருக்கும் ஞானமும், செல்வம், வீடுபேறு தருபவன். தேவர், மனிதர்கள் என எல்லோருக்கும் சகல நலங்களையும் அருள்பவன்’’ என்றார் சிவன்.   
ஆதலின் நமது சக்தி ஆறுமுகன் அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம் போல் பிரிவிலன்; யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருளவல்லான்.
‘விதைக்குள்ளே இருக்கிறது விஸ்வரூபம்’ என்பதற்கேற்ப சிவகுமரனின் விளையாட்டுக்கள் பிரமிக்க வைத்தன.
பாதாள உலகில் உள்ள பாம்புகளை பிடித்து, மலைகளைப் பிடுங்கி அவற்றில் அப்பாம்புகளைக் கட்டி தேர்போல இழுத்து வருவதும், திடீரென ஆகாயத்தில் உருவம் மாற்றி உலாவுவதும், அடுத்து விநாடி கடற்பரப்பில் நீந்துவதும், மின்னல்களைப் பறித்து மாலை போல அணிவதுமாக இருந்த முருகனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தேவர்களுக்கு திகைப்பு ஏற்படுத்தியது. ‘‘ஆபத்தான காரியங்களை செய்யும் இக்குழந்தை நமக்கு தீங்கு செய்ய அசுரர்கள் அனுப்பியதோ என இந்திரனிடம் முறையிட்டனர்.
நம்மை காக்க வந்த முருகன் தான் இப்படி வீரதீரச் செயல்களைச் செய்கிறான் என்ற உண்மையை உணராமல் இந்திரனும் அம்பைச் செலுத்தினான். அவனது வாகனமான யானையையும் ஏவினான். விநாடி நேரத்தில் எதிர் அம்பு பாய்ந்து இந்திரன் கீழே விழுந்தான். இந்திரன் ஏறி வந்த யானையான ஐராவதம் அலறியபடி கீழே சாய்ந்தது.
நடந்ததை அறிந்த நாரத மகரிஷி உடனே குருபகவானிடம் விஷயத்தைச் சொன்னார்.
‘முருகப்பெருமானே! அறியாமையால் இந்திரன் உங்களோடு போர் புரிந்து விட்டான்! கருணையுடன் காத்தருள்க!’’ என்று வேண்டினார்.
ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே! – நீதித்
தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்றவாறு நீ பேசு!
 இந்திரனுக்கும், தேவர்களுக்கும் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார் முருகன்.
‘பாலகன் என்று முருகனை எண்ணினோம்! ஆகாயத்திற்கும், பாதாளத்திற்குமாக விரி்ந்த இந்த அகண்ட தோற்றத்தைப் பார்த்தாலே அழிந்ததது சூரனின் ஆட்சி என்பது தெரிகிறதே’  என மகிழ்ந்தனர்.
பாதம் இரண்டில் பாதாள உலகம்!
கணைக்காலில் ஏழு தீவுகள்!
இடையைச் சுற்றிய உடையாய் ஏழுகடல்கள்!
தோள்களில் எண்திசைகள்!
நடுநாபியில் நீலவானம்!
தலையில் சொர்க்கலோகம்!
கண்களில் சூரியன் சந்திரன் அக்னி!
முடிக்கற்றையில் மேக மண்டலம்!
அதில் மலர்களாக நட்சத்திரங்கள்!
பேருருவம் கண்டு புளகாங்கிதமும், பேரானந்தமும் பெற்று அடி பணிந்தனர் அனைவரும்!
‘‘தேவாதி தேவப் பெருமாளே! எங்களை வாழ்விக்க வந்த பூரணரே! வேத முடிவாக விளங்கும் உங்கள் பாதங்களை வழிபட விரும்புகிறோம். கயிலை மலைக்கு அருகிலேயே உங்களுக்காக மயனைக் கொண்டு  ‘கந்த வெற்பு’  என்னும் மலையை அமைத்துள்ளோம். அங்கு எழுந்தருள வேண்டும்’’
 தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முருகன் அந்த மலைக்கோயிலில் எழுந்தருளினார்.
ஆன காலை அமரர்கள் வாசவன்
ஞான நாயக! நாங்கள் உனக்கொரு
தானை ஆகும்1 தலைவனை நீயெனா
வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினர்
கந்த நம! ஐந்து முகர் தந்த
முருகேச நம! கங்கை உமைதன்
மைந்த நம! பன்னிரு புயத்த நம!
நீபமலர் மாலை புனையும்
தந்தை நம! ஆறுமுக ஆதி நம!
சோதி நம! தற்பரம தாம்
எந்தை நம! என்றும் இளையோய் நம!
குமரா நம! என்று தொழுதார்!

ஞான நாயகரே! நாங்கள் அனைவரும் உமது படைகள்! தாங்கள் படைத்தலைவர்! தேவசேனாதிபதியான தங்களின் கட்டளையை ஏற்று நடப்போம்! எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறுவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar