Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விசித்திர வாழ்க்கை
 
பக்தி கதைகள்
விசித்திர வாழ்க்கை

பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் கிருஷ்ணருடன் தெருவில் சென்ற போது, முதியவர் ஒருவர் பணஉதவி கேட்டு வந்தார். ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான் அர்ஜுனன். முதியவருக்கு மகிழ்ச்சி. ‛‛ஆகா... இது இன்னும் பல ஆண்டுகளுக்கு என் குடும்பத்தேவையை நிறைவேற்றும்’’ என்றெண்ணி புறப்பட்டார். இதையறிந்த திருடன் ஒருவன், வழிமறித்து பொற்காசுகளை பறித்தான். சில நாட்கள் கழிந்ததும் ஒருநாள் மீண்டும் அவ்வழியே வந்தபோது அர்ஜுனனைக் கண்ண முதியவர் நடந்ததை விவரித்தார். உடனே தன்னிடம் இருந்த விலையுயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்தான்.   முதியவரும் வீட்டுக்குச் சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட தெரியாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்தார். இதையறியாத அவரது மனைவி பரணில் இருந்த பானையை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்க ஆற்றுக்குச் சென்றாள். பானையைக் கழுவும் போது அதற்குள் இருந்த கல் ஆற்றில் விழுந்தது.                  
அவள் பானையுடன் திரும்பிய போது, வெளியே சென்றிருந்த முதியவர் வீட்டுக்கு வந்தார். மனைவியின் கையில் குடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் ‛‛ பானைக்குள் இருந்த கல் எங்கே?’’ எனக் கேட்டார் .                  
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். பின்னர் உண்மையை தெரிவித்தார். இருவருமாக ஆற்றிற்குச் சென்று பல மணி நேரம் தேடியும் பலனில்லை.                    
சில நாட்கள் கழிந்த பின் மீண்டும் ஒருநாள் அர்ஜுனன், கிருஷ்ணரை சந்தித்த முதியவர் வீட்டில் நடந்ததை விவரித்தார்.  ‛‛இவர் அதிர்ஷ்டக்கட்டை போலிருக்கு கிருஷ்ணா!’’  என்றான் அர்ஜுனன். ஆமோதித்த கிருஷ்ணர், ‛‛இந்த முறை இரண்டு பொற்காசுகள் மட்டும் இவருக்கு கொடு,’’ என்றார்.                  
அர்ஜுனனனும் அவருக்கு கொடுத்து அனுப்பினான்.
‘‘இரண்டு காசுகள் இவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும் கிருஷ்ணா?’’ எனக் கேட்டான். ‘‘எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது என பார்ப்போம்’’  என்று சொல்லி முதியவரைப் பின் தொடர்ந்தனர். வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் இருந்த இரண்டு மீன்களை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி முதியவரை வேண்டினான்.                  ‘ இந்த மீன்களால் என் குடும்பத்தினரின் ஒருவேளை பசியைக் கூட போக்க முடியாதே’  என யோசித்தார். இருந்தாலும் அந்த மீன்களை வாங்கி மீண்டும் ஆற்றில் விட்டால் புண்ணியமாவது சேருமே என தீர்மானித்தார். வாங்கி மீன் ஒன்றை ஆற்றில் விட்டார். மற்றொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை உணர்ந்த அவர், அதன் வாயைப் பிளந்து பார்த்த போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அவரது மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் அதன் வாயில் இருப்பதைக் கண்டார். சந்தோஷ மிகுதியால் ‛சிக்கியாச்சு’ எனக் கூச்சலிட்டார் .                  
அந்த நேரத்தில் திருடன் அந்த வழியே செல்ல, முதியவரின் குரல் கேட்டுத் திடுக்கிட்டான். தன்னைத் தான் முதியவர் சொல்வதாக கருதி பதட்டமுடன் ஓடினான். அவனது தடுமாற்றம் கண்ட கிருஷ்ணரும், அர்ஜுனனும் அவனே பொற்காசுகளை பறித்த குற்றவாளி என அறிந்து தடுத்ததோடு, அவன் மறைத்து வைத்த பொற்காசுகளையும் பறிமுதல் செய்து முதியவரிடம் ஒப்படைத்தனர்.  
‛‛வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள்.  இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியமாகிறது கிருஷ்ணா?’’ என ஆச்சர்யப்பட்டான் அர்ஜுனன்.  .                  
புன்முறுவலுடன், ‘‘ முன்பு கொடுத்ததை தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எண்ணினார் முதியவர். நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்தார். சுயநல புத்தியால் அவை எதுவும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ இன்னொரு உயிர் வாழட்டும் என பொதுநலத்துடன் சிந்தித்தார். அந்த புண்ணிய பலனால் இழந்த செல்வத்துக்கும் அதிகமாகவே கிடைக்கப் பெற்றார்’’ என்றார் கிருஷ்ணர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar