Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாரதர் நடத்திய யாகம்
 
பக்தி கதைகள்
நாரதர் நடத்திய யாகம்


வீரவாகு முதலான ஒன்பது வீரர்களுடன், லட்சம் வீரர்களும் அணிவகுக்கும் படையின் தளபதியாக முருகன் விளங்கினான்.  தாங்கள் நிர்மாணித்த கந்தகிரியில் முருகனை எழுந்தருளச் செய்து வணங்கி மகிழ்ந்தனர் தேவர்கள். ‘படைத்தலைவர்களில் நான் முருகனாக விளங்குகிறேன்’ என பகவான் கிருஷ்ணரும் பகவத்கீதையில் அருளியிருக்கிறார்.
சூரபத்மனை வீழ்த்தி தேவர்களை நிம்மதியாக வாழச் செய்ய முருகப்பெருமான் போருக்குப் புறப்படப் போகிறார் என்னும் செய்தி அறிந்து நாரதரும் மகிழ்ந்தார்.  
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலுார் மணியே சரணம் சரணம்
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
இந்நிலையில் நாரதர் வேள்வி ஒன்றை நடத்த தயாரானார்.
பொதுவாக யாகங்கள் மூன்று வகைப்படும். அனைத்து உலகங்களும் நலம் பெற வேண்டும் எனக் கருதி செய்வது முதல் வேள்வி.  தானும், தன் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும் எனச் செய்வது இரண்டாவது வேள்வி. மூன்றாவது பகைவர்களை அழிக்கச் செய்வது. இதனை ‘அபிசார ேஹாமம்’ என்பர்.
நாரதர் கலகம் தான் செய்வார். ஆனால் அது நன்மையில் முடியும் என்பதை நாம் அறிவோம். இப்போதோ அனைவரும் நலம் பெறுவதற்காக யாகம் ஒன்றை நிகழ்த்தினார். ஆனால் போதாத நேரம். அதன் மூலம் அசம்பாவிதம் ஒன்று எதிர்பாராமல் நடந்தது. அக்னியில் சமர்பிக்கப்படும் புனித பொருட்களை விட அப்போது உச்சரிக்கப்படும் மந்திரங்களுக்குத் தான் பலன் அதிகம். பிழையின்றி தெளிவாக மந்திரங்களைச் சொல்பவர்களை வைத்தே வேள்வி நடத்த வேண்டும். புலி தனக்கான இரையைப் பற்றும் அதே பற்களால் தான் தன் குட்டியையும் பற்றி எடுத்துச் செல்லும். ஆனால் கூரிய பற்களின் கடி குட்டியின் மீது படாது. அதே சமயம் பிடி நழுவாது. ‘கடி பதியாது பிடி நழுவாது’ என்னும் முறையில் தான் மந்திர உச்சரிப்பு அமைய வேண்டும் என்கிறது மந்திர சாஸ்திரம். ‘நித்யத்துவம்’ என்பதற்குப் பதிலாக நாக்கு குழறி ‘நித்ரத்துவம்’ எனக் கேட்டதால் தான் கும்பகர்ணன் வாழ்வில் பெரும்பகுதியை துாக்கத்திலேயே கழிக்க நேர்ந்தது அல்லவா!
நன்மை கருதி நாரதர் நடத்திய வேள்வியில் எதிர்பாராமல் மந்திர உச்சாடனம் மாறியதால் யாகத்தில் இருந்து கோர உருவமுடைய ஆட்டுக்கிடா உருவானது. அறிவியல் கூடத்தில் அமிலம் தயாரிக்கும் போது ரசாயனம் மாற்றிக் கலக்கப்பட்டால் விபரீதம் ஏற்பட்டு குடுவையே வெடித்து விபத்து நேரிடும் அல்லவா! குறிப்பிட்ட ஒலிச்சேர்க்கையால் மந்திரங்கள் பலனைத் தருகிறது. எனவே உச்சரிப்பில் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம். ‘எம்பெருமானே உனை நான் உணங்குகிறேன்’ என்பதில் ஒரு புள்ளி விடுபட்டால் ‘எம பெருமானே உனை நான் வணங்குகிறேன்’ என்றல்லவா ஆகும்! எமனை வணங்கினால் நம்மை மேல் உலகுக்கு அல்லவா அனுப்ப அருள்புரிவார். இதனால் தான் ‘கற்க கசடற’ என்று திருவள்ளுவரும் ‘எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்’ என்று அருணகிரிநாதரும் அறிவுரை கூறியுள்ளனர்.
 நாரதர் நடத்திய யாகம் கலகத்திற்கு வழிவகுப்பது போல ஆட்டுக்கிடா தன் கூரிய கொம்புகளால் அனைவரையும் இடித்து தள்ளியது. அடக்க முடியாத வீரியத்துடன் புறப்பட்ட கிடா மூன்று உலகங்களிலும் பாய்ந்து திரிந்தது. நாரதர் உள்ளிட்ட முனிவர்களும், தேவர்களும் கயிலாயத்தை நோக்கி ஓடினர். ஆபத்தில் இருந்து காக்க சிவபெருமானைத் தஞ்சம் அடைய வந்தவர்கள், நவ வீரர்களுடன் உலாவிக் கொண்டிருந்த முருகப்பெருமானைப் பார்த்தனர். உடனே அவர்களின் முகத்தில் நிம்மதி மலர்ந்தது. நம் துயரத்தைப் போக்கத் தானே இவர் தோன்றியுள்ளார் என்னும் தெளிவு பிறந்தது.
மூவர்கள் முதல்வா ஓலம்!
முக்கண்ணன் புதல்வா ஓலம்!
சேவலங் கொடியாய் ஓலம்!
சிறந்த சிற்பரனே ஓலம்!
தேவர்கள் தேவே ஓலம்!
தெய்வ நாயகனே ஓலம்!
ஆவலுற்று அருள்வாய் ஓலம்!
அறுமுக ஓலம் ஓலம்!
அஞ்சாதீர்கள் என அபயக்கரம் நீட்டிய முருகன் அங்கு நின்றிருந்த வீரபாகுவை அழைத்தார். ‘உடனே புறப்பட்டு எங்கிருந்தாலும் அந்த ஆட்டுக்கிடாவை இங்கு கொண்டு வா’ என்று ஆணையிட்டார்.  பிரம்மா வீற்றிருக்கும் சத்திய லோகத்தில் வெறியுடன் கிடா திரிவதைக் கண்ட வீரபாகு அதன் கொம்பினை பலமாகப் பற்றி நொடிப்பொழுதில் இழுத்து வந்தார்.
‘‘நாரதரே! இனி யாகத்தை நலமுடன் செய்யுங்கள்’’ என வாழ்த்தினார் ஆறுமுகங்கள் கொண்ட முருகப்பெருமான். அவரது  ஒவ்வொரு முகமும் ஒரு செயலை நிறைவேற்றுவதாக திருமுருகாற்றுப்படை விளக்குகிறது. அந்தணர்கள் நடத்தும் யாகத்தை ஒரு முகம் காவல்புரிவதாக சொல்கிறது. இதனை,   
‘‘ஒருமுகம் மந்திரவிதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே!’  என்கிறார் நக்கீரர்.
தவறான மந்திர உச்சரிப்பால் வந்த ஆட்டுக்கிடாவை முருகன் தன் வாகனமாக ஏற்றார். முருகனுக்குரிய வாகனங்கள் மூன்று. மயில்வாகனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆடும், யானையும் மற்ற வாகனங்கள். திருப்போருர் கந்தசுவாமி கோயிலில் ஆட்டையும், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் யானையையும் தரிசித்து மகிழலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar